- Advertisement -
Homeவிளையாட்டுஐபிஎல் மட்டுமில்ல மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடரிலும் மாஸ் காட்டும் ருத்துராஜ். அசாத்திய வேகத்தில் அரை...

ஐபிஎல் மட்டுமில்ல மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடரிலும் மாஸ் காட்டும் ருத்துராஜ். அசாத்திய வேகத்தில் அரை சதம் அடித்து அசத்தல்.

- Advertisement-

ஐபிஎல் தொடரின் வெற்றியை அடுத்து மாநிலங்களுக்குள் அணிகள் பிரிக்கப்பட்டு மினி லீக் போட்டிகள் நடக்க ஆரம்பித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகள் நடந்து வருவது போல இந்த ஆண்டு முதல் மகாராஷ்டியா பிரிமீயர் லீக் போட்டிகள் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, ஏலமும் முடிந்து தற்போது போட்டிகளும் ஆரம்பம் ஆகி உள்ளன.

இதில் மொத்தம் ஆறு அணிகள் கலந்துகொள்ளும் நிலையில் புனேரி பாப்பா என்ற அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் ருத்துராஜ் கெய்க்வாட். இந்த அணியில் இவர் ஒரு ஐகான் பிளேயர் என்பதால் இவர் ஏலத்தில் இடம்பெறவில்லை. மாறாக இவரை நேரடியாக வாங்கியது புனே ஆணி. சிஎஸ்கே அணியில் இவரின் சிறப்பான ஆட்டத்தால் நிச்சயம் இவருக்கு புனே அணி பெரும்தகை கொடுத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக அவர் 590 ரன்கள் சேர்த்தார். சிஎஸ்கே அணி கோப்பையை வென்றதில் அவருக்கும் முக்கிய பங்கு உண்டு. அதே போல இப்போது எம்பிஎல் தொடரிலும் முதல் போட்டியிலேயே கலக்கியுள்ளார். கேதார் ஜாதவ் தலைமையிலான அணியோடு நேற்று ருத்துராஜின் அணி மோதியது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த கோலாப்பூர் டஸ்கர்ஸ் அணி 20 ஓவர்களில் 144 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியின் அன்கித் ஜவானே அதிகபட்சமால 57 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தார். அணிக் கேப்டன் கேதார் ஜாதவ் 22 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். புனே அணியில் பியூஷ் சால்வி அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

- Advertisement-

பின்னர் ஆடிய பூனே அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் பவன் ஷா இருவரும் முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்து சிறப்பான் அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இந்த இன்னிங்ஸில் அதிரடியாக ஆடிய ருத்துராஜ் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர் 27 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரின் இந்த இன்னிங்ஸில் ஐந்து சிக்ஸர்களும், ஐந்து பவுண்டரிகளும் அடக்கம்.

இதையும் படிக்கலாமே: இந்திய அணிக்கு ஆணவம் அதிகமாகிடுச்சு. இதெல்லாம் ரொம்ப கேலிக்குரியதா இருக்கு – கொதித்தெழுந்த ஜாம்பவான் வீரர்

இதில் புனே அணி 15 ஆவது ஓவரில் இலக்கை எட்டி முதல் வெற்றியை பதிவு செய்தது. அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ருத்துராஜ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

சற்று முன்