- Advertisement -
Homeவிளையாட்டுஒரே ஓவரில் ருதுராஜ் அடித்த 6, 4 ,4, 6

ஒரே ஓவரில் ருதுராஜ் அடித்த 6, 4 ,4, 6

- Advertisement-

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 6ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 49வது போட்டியில் மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 6வது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் சென்னையில் தரமான பந்து வீச்சில் 139/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக நேஹல் வதேரா 64 (51) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக மதிசா பதிரனா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் துரத்திய சென்னைக்கு பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக செயல்பட்ட ருதுராஜ் கைக்வாட் 41 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அனைத்து நல்ல தொடக்கம் கொடுத்தார்.

குறிப்பாக அர்சத் கான் வீசிய 3வது ஓவரின் 2வது பந்தில் மிட் விக்கெட் திசையில் சிக்ஸரை பறக்க விட்ட அவர் அடுத்த பந்தில் அதிரடியான பவுண்டரியை தெறிக்க விட்டு அசத்தினார். அதோடு நிற்காமல் 4வது பந்தில் ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் 5வது பந்தில் மீண்டும் பவுண்டரியை பறக்க விட்டு அவர் 6வது பந்தில் சிக்ஸரை தெறிக்க விட்டு ஒரே ஓவரில் 20 ரன்களை அடித்து அதிரடியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து அடுத்த சில ஓவர்களில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 30 (16) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதை வீணடிக்காத வகையில் மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே 44 (42) ரன்களும் அடுத்து வந்த ரஹானே 21 (17) ரன்களும் ராயுடு 12 (11) ரன்களும் சிவம் துபே 3 சிக்ஸருடன் 26* (18) ரன்களும் எடுத்தனர். அதனால் 17.4 ஓவரிலேயே 140/4 ரன்கள் எடுத்து சென்னை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சேப்பாக்கத்தில் மும்பையை 2010க்குப்பின் 12 வருடங்கள் கழித்து தோற்கடித்து அசத்தியது. இந்த வெற்றியால் புள்ளி பட்டியலில் 13 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ள சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை நெருங்கி வருகிறது.

- Advertisement-

சற்று முன்