- Advertisement 3-
Homeவிளையாட்டு500, 600 ரன் அடிச்சு என்ன பிரயோஜனம்.. தோத்தாலும் அந்த ஒரு விஷயம் சந்தோசமா இருக்கு...

500, 600 ரன் அடிச்சு என்ன பிரயோஜனம்.. தோத்தாலும் அந்த ஒரு விஷயம் சந்தோசமா இருக்கு – ருத்துராஜ்

- Advertisement 1-

சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய போட்டி, இந்த சீசனிலேயே சிறந்த போட்டியாக அமைந்திருந்த சூழலில், தற்போது பிளே ஆப் சுற்றுக்கும் இதன் மூலம் ஒரு முடிவு கிடைத்துள்ளது. முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தது.

மீதமிருந்த ஒரே ஒரு இடத்திற்காக பல அணிகள் போட்டி போட்டு வந்த நிலையில், தற்போது சில போட்டிகளின் முடிவில் அந்த வாய்ப்பை லக்னோ மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் தவற விட்டிருந்தது. இதனால், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் போட்டியில் யாருக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறதோ அவர்களுக்கே பிளே ஆப் அதிகம் இருக்கும் என கருதப்பட்டது.

இந்த நிலையில் தான் இரு அணிகளும் மோதிய போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்து முடிந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபியில் களமிறங்கிய அனைத்து வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்க்க, அவர்கள் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் சேர்த்திருந்தனர்.

சிஎஸ்கே அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் 201 ரன்களை தொட்டு விட்டால், ஆர்சிபியை முந்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற நிலை தான் இருந்தது. மறுபுறம், 200 ரன்களுக்குள் சிஎஸ்கேவை கட்டுப்படுத்த நினைத்து பந்து வீசிய ஆர்சிபிக்கு முதல் பந்திலேயே ருத்துராஜ் விக்கெட் கிடைத்தாலும், 3 வது விக்கெட்டிற்கு கைகோர்த்த ரஹானே மற்றும் ரவீந்திரா ஓரளவுக்கு சிஎஸ்கேவின் ஸ்கோரை மீட்டெடுத்தனர்.

- Advertisement 2-

ஆனாலும் கடைசி ஓவர்களில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருக்க, ஜடேஜா மற்றும் தோனி என இரண்டு பேரும் முடிந்த அளவுக்கு போராடி பார்த்தனர். ஆனாலும், 10 ரன்கள் அடிக்க முடியாததால் சிஎஸ்கே அணி பிளே ஆப் வாய்ப்பை இழக்க, ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 6 வெற்றிகளுக்கு பின்னர் கம்பீர கம்பேக் கொடுத்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த விரக்தியில் பேசி இருந்த சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ், “உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் பிட்ச் நன்றாக இருந்ததுடன் பந்தும் சிறிதாக சுழன்றது. ஆனால் இங்கே 200 ரன்கள் எட்டுவது எளிதானது தான். நாங்கள் சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். டி 20 போட்டிகளில் சில நேரம் இது போன்றும் நடைபெறும். அதே வேளையில், 14 போட்டிகளில் 7 வென்றுள்ளது மகிழ்ச்சியாக தான் உள்ளது.

காயம் காரணமாக இரண்டு முன்னணி பந்து வீச்சாளர்களை இழந்தது, கான்வே இல்லாமல் போனது என 3 வீரர்கள் இல்லாமல் போனது பெரிய வித்தியாசத்தை உண்டு பண்ணிவிட்டது. இந்த சீசன் முழுக்க எங்களுக்கு ஆதரவாக இருந்த சிஎஸ்கே ஊழியர்களுக்கு நன்றி. முதல் போட்டியில் இருந்தே வீரர்கள் காயம் அடைந்தது தொடங்கி பல்வேறு சவால்கள் இருந்தது.

கடந்த ஆண்டின் இறுதி போட்டியில் இருந்தது போன்றே இந்த முறையும் 2 பந்துகளில் 10 ரன்கள் வேண்டுமென்று இருந்தது. அதே போல, 500 முதல் 600 ரன்கள் அடிப்பது என்ற மைல்கல்லில் பெரிதாக ஆர்வம் இல்லை. இறுதியில் போட்டியில் வெற்றி பெறாமல் போனால் அது தான் உங்களுக்கு ஏமாற்றமாக இருக்கும்” என ருத்துராஜ் கூறியுள்ளார்.

சற்று முன்