- Advertisement -
Homeவிளையாட்டுமுரட்டு தோனி விசுவாசி போல.. பிறந்தநாள் ஸ்பெஷலாக ருத்துராஜ் கொடுத்த செம கிஃப்ட்...

முரட்டு தோனி விசுவாசி போல.. பிறந்தநாள் ஸ்பெஷலாக ருத்துராஜ் கொடுத்த செம கிஃப்ட்…

- Advertisement-

முதல் போட்டியில் செய்த சில தவறுகளால் இந்திய அணி தோல்வி அடைய, ஜிம்பாப்வே நிர்ணயித்த 116 ரன்கள் என்ற எளிய இலக்கை கூட அவர்களால் எட்ட முடியாமல் போயிருந்தது. இந்திய அணியில் இளம் வீரர்கள் இருக்க, அவர்கள் மிகச் சிறப்பாக பல பந்து வீச்சாளர்களையும் எதிர்கொண்டவர்கள். அப்படி இருந்தும் முதல் முறையாக ஜிம்பாப்வே மண்ணில் இவர்கள் இணைந்து ஆடி இருந்ததால் கூட தடுமாற்றமும், நெருக்கடியையும் உருவாகி ரன் சேர்க்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்கலாம்.

ஆனால் முதல் போட்டியில் என்னென்ன தவறுகளை செய்தார்களோ அதை எல்லாம் திருத்திக் கொண்டு இரண்டாவது போட்டியில் மிக எளிதாக ஜிம்பாப்வே அணியையும் அவர்கள் எதிர்கொண்டிருந்தனர். முதல் டி20 போட்டியில் பட்டையைக் கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா, டக் அவுட்டாகி இருந்தார். ஆனால் இரண்டாவது டி20 போட்டியில் மிக அதிரடியாக ஆடியதுடன் 8 சிக்ஸர்கள் சேர்த்து நூறு ரன்களையும் அவர் தொட்டிருந்தார்.

47 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்ததும் இன்னொரு பக்கம் அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய ருத்துராஜூம் 77 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். தொடர்ந்து ரிங்கு சிங்கும் கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட இந்திய அணி 234 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணியால் அதனை எட்ட முடியாமல் போக 134 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தது.

இதனால் இந்திய அணி இப்படித்தான் ஆடும் என்பதையும் தக்க பதிலடியுடன் அவர்கள் நிரூபிக்க, இனிவரும் போட்டிகளிலும் இதே ஆட்டத்துடன் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து வரும் ருத்துராஜ் அடித்த ரன்னை தோனியுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement-

இந்திய அணியில் தோனிக்கு பின்னர் கேப்டனாகும் வாய்ப்பு ருத்துராஜூக்கு கிடைத்திருந்த நிலையில் மிகச் சிறப்பாக அணியை வழிநடத்தி வந்தார். பேட்டிங்கிலும் அசத்தி இருந்த அவர், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரிலும் தேர்வாகி இருந்தார். முதல் போட்டியில் 7 ரன்கள் அடித்து அவர் அவுட்டான போது தோனியுடைய ஜெர்சி நம்பர் 7 என குறிப்பிட்டு ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள்.

அப்படி ஒரு சூழலில் இரண்டாவது டி20 போட்டியிலும் அவர் கடைசி வரை களத்தில் இருந்து 77 ரன்கள் சேர்த்துள்ளார். அதுவும் தோனி பிறந்தநாளான 7வது மாதம் 7 ஆம் தேதி, 77 ரன்கள் என அவர் அடித்ததில் உள்ள ஏழு ஒற்றுமையை ரசிகர்கள் தற்செயலாக நடந்ததாக வியப்புடன் குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்