- Advertisement -
Homeவிளையாட்டுரச்சின் ரவீந்திரா பேட்டிங்ல கோட்டை விட்டது இதுனால தான்.. நாங்க செஞ்ச பெரிய தப்பு.. உண்மையை...

ரச்சின் ரவீந்திரா பேட்டிங்ல கோட்டை விட்டது இதுனால தான்.. நாங்க செஞ்ச பெரிய தப்பு.. உண்மையை ஒத்துக் கொண்ட ருத்து..

- Advertisement-

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிய போட்டிக்கு முன்பாக மொத்தம் 12 போட்டிகள் 17 வது ஐபிஎல் தொடரில் முடிந்தது. இதில் 11 போட்டிகளில் சொந்த மைதானத்தில் ஆடிய அணிகள் தான் வெற்றி பெற்றிருந்தது. அப்படி ஒரு சூழலில் ருத்துராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி, முதல் இரண்டு போட்டியில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் ஆடி அதிரடியான வெற்றிகளை பெற்றிருந்த நிலையில், இந்த சீசனில் முதல் முறையாக டெல்லிக்கு எதிரான போட்டியில் வேறு மைதானத்தில் களமிறங்கி இருந்தது.

விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஏறக்குறைய போட்டி முழுக்க டெல்லி அணி தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அவர்கள் 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்களை எடுத்திருந்தனர். அந்த அணியின் முதல் மூன்று வீரர்களான ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த அணி சவால் நிறைந்த ஒரு இலக்கையும் சிஎஸ்கேவுக்கு நிர்ணயிக்க வழி உருவாகி இருந்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியில் தொடக்கமே சறுக்கலாக தான் இருந்தது. முதல் இரண்டு போட்டிகளில் பட்டையை கிளப்பிய ரச்சின் ரவீந்திரா, 12 பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். கேப்டன் ருத்துராஜூம் ஒரு ரன்னில், அவுட்டாக பின்னர் வந்த ரஹானே மற்றும் டேரில் மிட்செல் நன்றாக ஆடினாலும் இலக்கை நெருங்க அது உதவி செய்யவில்லை.

அதே போல ஜடேஜா மற்றும் ஷிவம் துபேவும் ரன் சேர்க்க தடுமாற, கடைசி ஓவர்களில் களமிறங்கிய தோனி, 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அனைவரையும் அசர வைத்திருந்தார். அதிலும் கடைசி பந்தில் அவர் சிக்ஸர் அடித்து சிஎஸ்கே தோற்ற போதிலும், அதை விட தோனியின் பேக் டூ ஃபார்மை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினர். சிஎஸ்கே அணி 171 ரன்கள் சேர்க்க, டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரின் முதல் வெற்றியை ருசித்திருந்தது.

- Advertisement-

கேப்டனாக ஐபிஎல் தொடரின் முதல் தோல்விக்கு பின்னர் ருத்துராஜ் பேசுகையில், “முதல் 6 ஓவர்களுக்கு பிறகு பவுலர்கள் கம்பேக் கொடுத்தது நிச்சயம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தது. அதிலும் 190 ரன்களில் அவர்களை கட்டுப்படுத்தியது நல்ல முயற்சி. எக்ஸ்டரா பவுன்ஸ் உள்ளிட்ட காரணங்களால் ரச்சின் ரவீந்திரா ரன் அடிக்கத் தவறி விட்டார். அது தான் போட்டியை வேறுபடுத்தியது. முதல் பாதியில் நாங்கள் வென்று விடலாம் என்று தான் நினைத்தோம்.

ஆனால், அதனை எங்களால் பவர் பிளேவில் செய்து காட்ட முடியவில்லை. நாங்கள் எப்போதும் பின் தங்கியே தான் இருந்தோம். இரண்டு போட்டிகளில் வென்ற பின் ஒரு போட்டியில் இப்படி ரன் குறைந்து தோற்று போவது நடப்பது தான். அதனால் இதனை நினைத்து பெரிதாக கவலைப்பட வேண்டாம்” என ருத்துராஜ் மிக கூலாக பேசி இருந்தார்.

சற்று முன்