- Advertisement -
Homeவிளையாட்டுரெய்னா, ஜடேஜாவுக்கு கூட கிடைக்காத கவுரவம்.. தோனிக்கு பிறகு ருத்துராஜ் தொட்ட ஸ்பெஷல் உயரம்..

ரெய்னா, ஜடேஜாவுக்கு கூட கிடைக்காத கவுரவம்.. தோனிக்கு பிறகு ருத்துராஜ் தொட்ட ஸ்பெஷல் உயரம்..

- Advertisement-

ஐபிஎல் திருவிழா ஒரு பக்கம் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் தான் ருத்துராஜ் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தது மிகப்பெரிய பேசு பொருளாகவும், ட்ரெண்டிங் ஆகவும் சமூக வலைத்தளங்களில் இருந்து வந்தது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு கூட ருத்துராஜால் தோனியின் இடத்தை நிரப்ப முடியுமா என்ற கேள்வி தான் அதிகமாக இருந்தது.

ஆனால் ஆர்சிபி அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக சிஎஸ்கே அணியை தோனி உதவியுடன் வழி நடத்தி தனது கேப்டன் பயணத்தை வெற்றிகரமாகவும் தொடங்கியுள்ளார் ருத்துராஜ். 2022 ஆம் ஆண்டு சிஎஸ்கேவின் கேப்டனாக ஜடேஜா மாறிய சமயத்தில் அவரது செயல்பாடு சிறப்பாக இல்லை. இதனால் அவர் கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டு தோனி மீண்டும் கேப்டனாக மாறி இருந்தார். தோனியின் வயது காரணமாக அவர் எப்போது வேண்டுமானாலும் ஓய்வினை அறிவிப்பார் என்ற ஒரு சூழலில் தான் அடுத்து யார் சிஎஸ்கேவின் கேப்டனாக பொருத்தமாக இருப்பார்கள் என்ற கேள்வியும் இருந்து வந்தது.

இதில் பல பேரின் பெயர்கள் அடிபட்டு இருந்தாலும் முதல் தர போட்டிகளில் கேப்டனாக இருந்த அனுபவமுள்ள ருத்துராஜூக்கு தோனி போன்ற ஒரு ஜாம்பவானின் கேப்டன் இடம் தற்போது கிடைத்துள்ளது. ஆர்சிபி அணியை வீழ்த்திய பின்னர் பேசி இருந்த சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ், தான் எந்தவித நெருக்கடியும் இன்றி தனது அணியை வழிநடத்தி இருந்ததாகவும் தோனி பாய் இருப்பதால் நெருக்கடிக்கான தேவையே இல்லை என்றும் மிகக் கூலாக பேசியிருந்தார். அப்படியே தோனியின் பேச்சை நினைவுபடுத்துவது போல ருத்துராஜின் பேச்சும் அமைந்திருந்ததால் நிச்சயம் அவரை போல வெற்றிகரமான கேப்டனாக சிஎஸ்கே அணிக்கு வருங்காலத்தில் இருப்பார் என்றும் கருதப்பட்டு வருகிறது.

அப்படி ஒரு சூழலில் தான் தனது முதல் வெற்றியே முத்தான வெற்றியாக மாற்றி உள்ளார் ருத்துராஜ். இதற்கு முன்பு சிஎஸ்கேவை தோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா வழிநடத்தி உள்ளனர். இதில் ரெய்னா மற்றும் தோனி ஆகியோர் முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடி தந்திருந்த நிலையில் ஜடேஜா கேப்டனாக முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தார். ஆனால் ருத்துராஜ் தனது முதல் கேப்டன்சி போட்டியிலேயே வெற்றியுடன் தொடங்கியுள்ளது சிறப்பான ஒரு சம்பவமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement-

அது மட்டுமில்லாமல் சிஎஸ்கே அணி டி 20 போட்டிகளில் ஆடிய 250 வது போட்டி இதுவாகும். இதற்கு முன்பாக முதல் போட்டி, 50 வது போட்டி, நூறாவது போட்டி, 150 வது போட்டி, 200 வது போட்டி என அனைத்தையும் தோனி தான் சிஎஸ்கே கேப்டனாக வழி நடத்தி இருந்தார். அவரைத் தாண்டி 250 ஆவது போட்டி என்ற மைல்கல்லில் சிஎஸ்கேவை தலைமை தாங்கியதுடன் அதனை வெற்றி பெறச் செய்துள்ள ருத்துராஜை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.

சற்று முன்