- Advertisement -
Homeவிளையாட்டுசிஎஸ்கேவோட அடுத்த தோனியே தான்.. மேட்ச் ஜெயிச்சதும் கெத்தாக ருத்துராஜ் சொன்ன வார்த்தை.. இத கவனிச்சீங்களா?..

சிஎஸ்கேவோட அடுத்த தோனியே தான்.. மேட்ச் ஜெயிச்சதும் கெத்தாக ருத்துராஜ் சொன்ன வார்த்தை.. இத கவனிச்சீங்களா?..

- Advertisement-

17வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததற்கு மிக முக்கிய காரணம் ஒரு வருடம் கழித்து தோனி டாஸ் போட வரும் சமயத்தில் அவர் பேசும் விஷயங்களையும் போட்டி முடிந்த பின்னர் கேப்டனாக அவர் பேசும் விஷயங்களை கவனிப்பதற்காகவும் தான் இருந்து வந்தது. அப்படி இருக்கையில் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க ஒரு நாள் இருந்த சூழலில் புதிய கேப்டனாக சிஎஸ்கே அணி ருத்துராஜை நியமித்திருந்தது.

ஏற்கனவே கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் கேப்டன்களாக இல்லாத சமயத்தில் தோனி போன்ற சீனியர் விரரும் திடீரென கேப்டன் பதவியை துறந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அதே வேளையில் அவர்களை சோகத்திலும் ஆழ்த்தி இருந்தது.

ஏற்கனவே தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இது இருக்கலாம் என்று தகவல் பரவலாக இருக்கும் சூழலில் தான் தோனி எடுத்த இந்த முடிவும் ரசிகர்களை சற்று ஏங்க வைத்துள்ளது. தோனியின் பேட்டிங் மற்றும் கீப்பிங் எந்த அளவுக்கு சிஎஸ்கே ரசிகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேபோல போட்டிக்கு முன்னரும் பின்னரும் அவர் பேசும் விஷயங்களும் ரசிகர்களை வெகுவாக கவரும்.

இதனால் தோனி கேப்டன்சியில் இருந்து விலகியது அவர் பேச்சை இனி கேட்க முடியாது என்றும் ரசிகர்களை கலங்க வைத்தது. இப்படி சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்திலும் அதிர்ச்சிக்கும் உள்ளான ஒரு சூழலில் தான் இந்த சீசனின் முதல் போட்டி முடிந்துள்ளது. ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய, அந்த அணியில் இடம்பெற்றிருந்த அதிரடி வீரர்களான கோலி, பாப் டு பிளெஸ்ஸிஸ், மேக்ஸ்வெல் உள்ளிட்டோரின் பேட்டிங் பெரிய அளவில் எடுபடவில்லை.

- Advertisement-

78 ரன்களில் 5 விக்கெட்டுகளையும் அவர்கள் இழக்க, தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் உதவியால் 173 ரன்கள் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணியில் கேப்டன் ருத்துராஜ் 15 ரன்களில் அவுட் ஆனாலும், மற்றொரு இளம் வீரர் ரவீந்திரா அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். நடுவே ரஹானே மற்றும் டேரில் மிட்செல் அடுத்தடுத்து அவுட் ஆனாலும், கடைசி கட்டத்தில் கைகோர்த்த துபே மற்றும் ஜடேஜா ஆகியோர், 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து இந்த சீசனை வெற்றியுடன் சிஎஸ்கே தொடங்கவும் உதவி செய்தனர்.

சிஎஸ்கேவின் கேப்டனாக முதல் போட்டியிலேயே வெற்றியை தேடிக் கொடுத்த ருத்துராஜ் இது பற்றி பேசுகையில், “ஆரம்பத்தில் இருந்தே போட்டி எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஒரு சில ஓவர் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும் சுழற்பந்து வீச்சாளர்கள் வந்தபின் நாங்கள் முழு கண்ட்ரோலையும் எடுத்து விட்டோம். பத்து பதினைந்து ரன்கள் குறைவாக கட்டுப்படுத்தினாலும் அவர்கள் திரும்ப போட்டியில் கம்பேக் கொடுத்திருந்தது சிறப்பாக இருந்தது. அதேபோல மேக்ஸ்வெல் மற்றும் டு பிளெஸ்ஸிஸ் ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து எடுத்தது தான் போட்டியின் திருப்பமுனையாக நான் பார்க்கிறேன்.

அதன் காரணமாக அடுத்த ஒரு ஐந்து முதல் ஆறு ஓவர்களை நாங்கள் கட்டுப்படுத்தி இருந்தோம். கேப்டனாக அறிமுகமாகிய எனக்கு அதிகப்படியான நெருக்கடி தோன்றவில்லை. மாநிலத்திற்காக தலைமை தாங்கிய போதும் அப்படித்தான். ஒருமுறை கூட நெருக்கடியை எங்கேயும் நான் உணரவில்லை. தோனி பாய் பின்னே இருக்கும் போது நான் அதை நினைத்து பயப்பட வேண்டாம். உங்கள் அணியில் உள்ள வீரர்களுக்கும் என்ன ரோல் என்பது பேட்டிங்கில் தெளிவாக உள்ளது.

அது தான் எங்களுக்கு பெரிதாக உதவி செய்தது. இது தவிர இன்னும் சில விஷயங்களை சரி செய்ய உள்ளது. டாப் ஆர்டர் பேட்டிங்கில் சிலர் நன்றாக ஆடிவிட்டால் சேசிங் செய்வது எளிதாகி விடும்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்