ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இப்போது திளைத்திருக்கிறது சிஎஸ்கே அணி. அதே அளவுக்கு மகிழ்ச்சியில் இருப்பார்கள் உலகம் முழுவதும் உள்ள சிஎஸ்கே ரசிகர்களும். ஏராளமான சிஎஸ்கே ரசிகர்கள் சென்னையில் இருந்து குஜராத்துக்கு சென்று போட்டியை நேரில் கண்டுகளித்தனர்.
கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவின் முழுமையான பொழுதுபோக்காக மாறி ரசிகர்களின் நேரங்களை கவர்ந்துகொண்ட ஐபிஎல் தொடர் நேற்றோடு முடிவுக்கு வந்தது. குஜராத் அகமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கடந்த ஆண்டு ப்ளே ஆஃப்க்கு கூட செல்லாமல் வெளியேறிய சிஎஸ்கே அணி அப்போது சொன்ன மாதிரியே இந்த சீசனில் கடினமாக உழைத்து கம்பேக் கொடுத்துள்ளது. அணியில் பவுலிங் யூனிட், பேட்டிங் யூனிட் என அனைத்தையும் சிறப்பாக மேலாண்மை செய்தார் கேப்டன் தோனி. இதன் மூலமே இந்த ஐந்தாவது கோப்பையை வென்றுள்ளது சிஎஸ்கே அணி.
இந்த சீசனில் தனது பேட்டிங் மூலம் குறிப்பிடத்தக்க அளவுக்கு பங்களிப்பை செய்துள்ளார் ருத்துராஜ் கெய்க்வாட். நேற்றைய இறுதிப் போட்டியிலும் 16 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். போட்டி முடிந்ததும் பேசிய அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அவரது பேச்சில் “இந்த சீசன் மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனென்றால் கடந்த ஆண்டு எங்களுக்கு எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். மீண்டும் கம்பேக் கொடுத்து சேப்பாக்கத்தில் போட்டிகளை வென்றதும், மற்ற மைதானங்களில் நடக்கும் கேம்களில் வெற்றி பெற்றதும் சிறப்பான ஒன்று . இந்த சீசனில் அனைவரும் பங்களித்த விதம் சிறப்பானது.
இதையும் படிக்கலாமே: ஐபிஎல் 2023 பைனலில் யாருக்கு என்ன விருது கொடுக்கப்பட்டது? பரிசுத்தகை என்ன? முழு விவரம்
இன்றைய போட்டியின்போது நானும் கான்வேவும் 4 முதல் 5 ஓவர்களில் சிறப்பான ஒரு துவக்கத்தை கொடுக்கவேண்டும் என்று பேசிக்கொண்டோம். அதன் பிறகு அடித்து ஆடலாம், விக்கெட் கையில் இருப்பதால் ஒரு ஓவருக்கு 12-13 என்ற கணக்கில் எளிதாக சேஸ் செய்யலாம் என்று எண்ணினோம். இந்த சீசன் முழுவதும் கான்வேயுடன் பேட்டிங் செய்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம் பைனலில் எங்கள் ஆட்டம் சிறப்பாக இருந்தது சந்தோஷம் எனக் கூறியுள்ளார்..