- Advertisement 3-
Homeவிளையாட்டுருதுராஜ் கெய்க்வாட் ரொம்ப ஸ்பெஷல்.. விக்கெட் சரிந்த போதும் எப்படி ஆடினாரு பாருங்க... சூர்யகுமார் யாதவ்...

ருதுராஜ் கெய்க்வாட் ரொம்ப ஸ்பெஷல்.. விக்கெட் சரிந்த போதும் எப்படி ஆடினாரு பாருங்க… சூர்யகுமார் யாதவ் பேட்டி

- Advertisement 1-

இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 123 ரன்களை விளாசினார்.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்களை எடுத்து அபார வெற்றியை பெற்றது. கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவையாக இருந்த போது, மேக்ஸ்வெல் அபாரமாக பவுண்டரியை விளாசி வெற்றிபெற வைத்தார். சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 104 ரன்களை விளாசினார்.

இதன் மூலமாக சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியில் இந்திய அணி முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது. இந்த தோல்வி பற்றி சூர்யகுமார் பேசும் போது, ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை விரைவாக வீழ்த்துவது தான் எங்களின் திட்டமாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. மேக்ஸ்வெல் களத்தில் இருந்த போதே, பவுலர்களிடம் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று தொடர்ந்து கூறினென்.

அக்சர் படேலிடம் ஏராளமான அனுபவங்கள் உள்ளது. ஐபிஎல் தொடரில் ஆடிய அனுபவம், இந்திய அணிக்காக ஆடிய அனுபவம் உள்ளது. அதனால் அவருக்கு 19வது ஓவரை கொடுத்தேன். பனிப்பொழிவு இருந்த போது அக்சர் படேலை வைத்து முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அது சரியாக அமையவில்லை.

- Advertisement 2-

ருதுராஜ் கெய்க்வாட் எப்போதும் ஸ்பெஷலான பிளேயர். பிரான்சைஸி கிரிக்கெட்டின் போதே ஏராளமான முறை கூறி இருக்கிறேன். குறிப்பாக இன்றைய ஆட்டத்தில் நான் ஆட்டமிழக்க பின் ருதுராஜ் இன்னிங்ஸை கட்டமைத்த விதம் சிறப்பாக இருந்தது. தோல்வியடைந்தாலும் இந்திய அணியின் செயல்பாடு பெருமை அளிக்கிறது என்று கூறினார்.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 வெற்றி மற்றும் ஆஸ்திரேலியா ஒரு வெற்றியுடன் இருப்பதால், அடுத்து வரும் 2 போட்டிகள் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்