ருதுராஜ் தோக்கனும்னு பலபேர் நினைக்கறாங்க.. அவர் தன்னை சீக்கிரம் நிருபீச்சே ஆகணும்.. இல்லாட்டி மொத்தமா காலி – முன்னாள் இந்திய வீரர் பரபரப்பு பேச்சு

- Advertisement -

அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வருகிறார். அதோடு எதிர்வரும் ஏசியன் கேம்ஸ் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஏனெனில் இந்திய அணியில் உள்ள தற்போதைய சீனியர் வீரர்கள் இன்னும் ஒரு சில ஆண்டுகளே விளையாடுவார்கள் என்பதால் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் திட்டத்தில் இருக்கும் பிசிசிஐ ருதுராஜ் கெய்க்வாட்டை அடுத்த கேப்டனாகவும் நியமிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதன் காரணமாகவே அவருக்கு ஏசியன் கேம்ஸ் தொடரில் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மகாராஷ்டிரா அணிக்காக கேப்டனாகவும் செயல்பட்டு வருவதால் அவர் இனிவரும் தொடர்களில் இந்திய அணியில் நிரந்தர இடத்தினை பிடித்து விளையாட வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே தனது வாய்ப்புக்காக காத்திருந்த ருதுராஜ் இனி கட்டாயம் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரீம் தோனியின் தலைமையின் கீழ் ருதுராஜ் விளையாடி வருவதால் அவரால் நிச்சயம் போட்டியை புரிந்து கொண்டு அணியை வழிநடத்தும் திறமை இருக்கும் என்று கூறி அவரை இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக மாற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : ருதுராஜ் கெய்க்வாட் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவதை நான் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் திறமையான வீரர்கள். குறிப்பாக ருதுராஜ் மூன்று வகையான இந்திய அணியிலும் விளையாட தகுதியானவர். அந்த அளவிற்கு அவரிடம் திறமை இருக்கிறது.

- Advertisement -

நிச்சயம் என்னை பொருத்தவரை வருங்கால இந்திய அணியின் கேப்டனாகவும் அவர் மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் அவர் தோனியின் தலைமையின் கீழ் விளையாடி வருகிறார். எனவே போட்டியின் எந்த சூழலை எவ்வாறு சமாளிக்க வேண்டும் அதனை எப்படி கடந்து செல்ல வேண்டும் என்பதை அவர் கற்றுக் கொண்டிருப்பார்.

அவரது டெஸ்ட் அறிமுகத்திற்காக நான் காத்திருக்கிறேன் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஜெய்ஸ்வால் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்துள்ளார். அதேபோன்று டி20 தொடரில் அரைசதம் அடித்து தன்னை நிரூபித்துள்ளார். எனவே அவரும் ஒரு முக்கிய பேட்ஸ்மேனாக இந்திய அணியில் நீடிப்பார்.

அதே சமயம் பல வீரர்கள் சிறப்பாக ஆடுவதால் ருதுராஜ் தன் திறமை மீது நம்பிக்கை வைத்து சிறப்பாக ஆடி அதிகப்படியான ரன்களை குவிக்க வேண்டும். ருதுராஜின் தோல்விக்காக பலர் வெளியே காத்திருக்கிறார்கள். இவர் தோற்றால் மற்றவர்கள் உள்ளே வருவார். அதனால் ருதுராஜ் விரைந்த சிறப்பாக செயல்பட்டு தன் நிலையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.

- Advertisement -

சற்று முன்