- Advertisement 3-
Homeவிளையாட்டுபேட்டிங்ல சொதப்பிட்டு ஃபீல்டிங்க மட்டும் குறை சொன்ன ருத்துராஜ்.. இதெல்லாம் நியாயமா கேப்டன்..

பேட்டிங்ல சொதப்பிட்டு ஃபீல்டிங்க மட்டும் குறை சொன்ன ருத்துராஜ்.. இதெல்லாம் நியாயமா கேப்டன்..

- Advertisement 1-

முதல் நான்கு போட்டிகளில் ஆறில் வெற்றி கண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்த ஆறு போட்டியில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று மிகப் பரிதாபமான நிலையிலும் தற்போது உள்ளது. மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றிற்கு மிக அழகாக முன்னேற்றம் காணலாம் என்ற நிலையில் தான் சிஎஸ்கே அணி அடுத்த இரண்டு போட்டிகளில் இனிமேல் ராஜஸ்தான் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளையும் சந்திக்க உள்ளது.

முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர்களான சுதர்சன் மற்றும் கில் என இருவருமே சிஎஸ்கே அணிக்கு எதிராக மிக அசால்டாக ஆடி சதம் அடிக்க பல்வேறு சாதனைகளையும் தற்போது தங்கள் பெயரில் அவர்கள் எழுதியுள்ளனர்.

தொடர்ந்து ஆடிய சென்னை அணியில் ரஹானே, ருத்துராஜ், ரச்சின் ரவீந்திரா என டாப் வீரர்கள், அணியின் ஸ்கோர் 10 ரன்கள் ஆவதற்குள் அடுத்தடுத்து அவுட்டாக 100 ரன்களை கடப்பதே கடினமான நிலையாக தான் சிஎஸ்கேவுக்கு இருந்தது. அப்படி ஒரு சூழலில், மொயீன் அலி மற்றும் மிட்செல் ஆகியோர் ஓரளவுக்கு அதிரடியாக ஆடி ரன் சேர்த்த வண்ணம் இருந்தனர்.

ஆனாலும் போட்டியை வெற்றி பெறுவதற்கு அவை போதுமானதாக இல்லை என்பதால் 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் தான் சிஎஸ்கே அணியால் எடுக்க முடிந்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதுடன் மட்டுமில்லாமல் தங்களின் பிளே ஆப் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது.

- Advertisement 2-

இந்த போட்டியின் தோல்வியால் விரக்தியில் இருக்கும் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பேசியிருந்த கேப்டன் ருத்துராஜ், “எங்களின் ஃபீல்டிங் தான் அணிக்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துவிட்டது. நாங்கள் 10 முதல் 15 ரன்கள் வரை அதிகமாக கொடுத்துவிட்டோம் என நினைக்கிறேன். எங்களின் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் சிறப்பாக ஈடுபட்டிருந்தாலும் குஜராத் அணி வீரர்கள் சிறப்பான ஷாட்களை ஆடி இருந்தனர்.

பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடும் போது நீங்கள் அவர்களை கட்டுப்படுத்தவே முடியாது. எங்களின் அடுத்த போட்டி விரைவில் சென்னைக்கு சென்று இன்னும் ஒரு தின இடைவெளியில் ஆட வேண்டியுள்ளது. மேலும் அது ராஜஸ்தான் போன்ற கடினமான அணிக்கு எதிராக ஒரு கடினமான போட்டியாகும்” என ருத்துராஜ் கூறி உள்ளார்.

சற்று முன்