- Advertisement -

தேஷ்பாண்டே இல்ல, அவரு தான் ஹீரோவே.. நூறு மிஸ் பண்ணத விட இதான் வருத்தம்.. மனம் திறந்த ருத்து..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத் அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் காரணமாக புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு அதிரடி முன்னேற்றத்தை கண்டுள்ளது. சொந்த மைதானத்தில் நடந்து முடிந்த ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ அணிக்கு எதிராக மட்டும் தோல்வி அடைந்திருந்தது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் ருத்துராஜ், டேரில் மிட்செல், ஷிவம் துபே உதவியுடன் 212 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஆடிய ஹைதராபாத் அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என்று தான் அனைவரும் கருதினர். ஆனால் சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் முந்தைய போட்டியை போல இல்லாமல் மிகச் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்த 132 ரன்களில் ஹைதராபாத் அணி ஆல் அவுட்டானது. இதனால், சென்னை அணி 78 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இதற்கு பின் பேசியிருந்த கேப்டன் ருத்துராஜ், “கடினமான இந்த பிட்ச்சில் கூட 70 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அருமையாக உள்ளது. டாஸ் தோற்றது சாபத்திலும் ஒரு ஆசீர்வாதம் என்று நான் நினைக்கிறேன். அதேபோல எனக்கு காயம் ஏதும் பெரிதாக இல்லை. அனைத்தும் நன்றாகவே உள்ளது. அதிக வெயில் இருப்பதன் காரணமாக கடந்த இரண்டு போட்டியிலும் இருபது அவர்கள் ஆடி, ஏறக்குறைய 20 ஓவர் வரைக்கும் ஃபீல்டிங் செய்தது தான் சோர்வாக மாற்றி விட்டது.

நான் நூறு அடிக்காமல் அவுட் ஆனது எனக்கு வருத்தமாக இல்லை. அணியின் ஸ்கோர் 220 க்கு மேல் இருக்க வேண்டும் என்று தான் நினைத்தோம். அதேவேளையில் நான்கு முதல் ஐந்து ஷாட்களை தவறவிட்டதே ஏமாற்றமாக உள்ளது. கடந்த போட்டியில் சில லூஸ் பந்துகளை வீசி அங்குமிங்குமாக சில தவறுகளை செய்தோம். ஆனால் இன்று அப்படியே நேர்மாறாக சிறப்பான ஆட்டத்தை ஃபீல்டிங்கில் வெளிப்படுத்தி உள்ளோம்.

- Advertisement -

எங்களுக்கான திட்டங்களை அப்படியே செயல்படுத்தி சூழ்நிலைக்கு ஏற்ப வகையிலும் செயல்பட்டு இருந்தோம். பவர்ஃ பிளேவில் விக்கெட் எடுக்காமல் இருந்த தவறை தான் இந்த முறை சரி செய்து எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தோம். துஷார் தேஷ்பாண்டே மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரது கடின உழைப்பிற்கும் பயனாக இந்த போட்டி அமைந்துள்ளது.

அதேபோல ஜடேஜாவையும் இந்த நேரத்தில் நான் குறிப்பிட விரும்புகிறேன். இதுபோன்ற பனி அதிகமுள்ள சூழல்களில் 22 ரன்கள் மட்டுமே கொடுத்தது தான் போட்டியின் திருப்புமுனையான பந்து வீச்சு. அணியில் உள்ள சீனியர் வீரர்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை. நீங்கள் பின்னால் இருந்து கொண்டால் அவர்கள் வேலையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்” என ருத்து கூறினார்.

- Advertisement -
Published by

Recent Posts