- Advertisement 3-
Homeவிளையாட்டுரஹானே ஓப்பனிங் ஆட இதான் காரணம்.. எங்க இளம் கீப்பர் அடிச்ச 3 சிக்ஸ் தான்.....

ரஹானே ஓப்பனிங் ஆட இதான் காரணம்.. எங்க இளம் கீப்பர் அடிச்ச 3 சிக்ஸ் தான்.. ருத்துராஜ் கலகல..

- Advertisement 1-

சிஎஸ்கே அணியின் இளம் கேப்டன் ருத்துராஜ் தலைமையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் மூன்று வெற்றிகளை பெற்ற சிஎஸ்கே, மற்ற மைதானங்களில் தோல்வி அடைந்திருந்ததால் சென்னை அணி மீது அதிகமாக விமர்சனம் எழுந்திருந்தது. மற்ற மைதானத்தில் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்றும் சொந்த மைதானத்தில் தங்களுக்கு சாதகமான பிட்ச்சில் சிறப்பாக ஆடி வெற்றி பெறுவதாகவும் கருத்துக்கள் பரவி வந்த சூழலில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அவை அனைத்தையும் தவிடு பொடியாக்கி உள்ளது சிஎஸ்கே.

வான்கடே மைதானத்தில் மும்பையை எதிர்த்து வெற்றி பெறுவது மிக மிக சவாலான விஷயம். ஆனால் அதனை அல்வா சாப்பிடுவது போல எடுத்துக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் களம் இறங்கி 20 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி பவர் பிளேவில் ஆடிய ஆட்டத்தை பார்த்த போது மிக எளிதாக வெற்றி பெற்று விடும் என்று தான் அனைவரும் கருதினர்.

ஆனால் எட்டாவது ஓவரில் உள்ளே வந்த பந்து வீச்சாளர் பதிரானா, மும்பை ரசிகர்களின் கனவை சுக்கு நூறாக்கினார். முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் மற்றும் சூர்ய குமார் விக்கெட்டை எடுத்த பதிரானா, மொத்தம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்தார். ரோஹித் சதமடித்தும், 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணியால் 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த வெற்றியால் சென்னை அணி ஆறு போட்டிகளில் நான்கில் வென்றுள்ள நிலையில் மறுபுறம் மும்பை அணி ஆடியுள்ள ஆறு போட்டிகளில் இரண்டில் மட்டும் தான் வெற்றி கண்டு சற்று நெருக்கடியான ஒரு சூழலிலும் உள்ளது. இந்த வெற்றிக்கு பின் உற்சாகமாக பேசி இருந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்துராஜ், “ஒரு இளம் விக்கெட் கீப்பர் அந்த மூன்று சிக்ஸர்களை அடித்தது எங்களுக்கு பெரிதாக உதவி இருந்தது. அதுதான் இந்த போட்டியில் வித்தியாசம் என்றும் நினைக்கிறேன்.

- Advertisement 2-

வான்கடே போன்ற ஒரு மைதானத்தில் அந்த 10 – 15 ரன்கள் எக்ஸ்ட்ரா இருப்பது மிக முக்கியமானதாகும். மிடில் ஓவர்களில் பும்ரா சிறப்பாக பந்து வீசி இருந்தார். மும்பை அணி சிறப்பாக ஆடி ரன் சேர்த்த போதும் எங்கள் பந்துவீச்சில் திருப்புமுனை நிகழ்ந்தது தான் போட்டி எங்கள் பக்கம் மாறி இருந்ததாக கருதுகிறேன். எங்களின் மலிங்கா மிகச் சிறப்பாக யார்க்கர் பந்துகளை வீசி இருந்தார்.

அதேவேளையில் துஷார் தேஷ்பாண்டே மற்றும் ஷர்துல் தாக்கூர் பந்து வீச்சையும் மறந்துவிடக்கூடாது. எங்கள் அணியின் திட்டத்தை பொறுத்தவரையில் மிக சாதாரணமாக இருந்து அனைவரையும் தேற்றி அவர்கள் பணியை செய்ய வைக்க வேண்டும் என்பதுதான். ரஹானே ஒரு சிறிய காயத்துடன் அவதிப்பட்டதால் தான் அவரை தொடக்க வீரராக களம் இறக்க முடிவு செய்திருந்தோம்.

அதேவேளையில் நான் எந்த ஒரு இடத்திலும் இறங்கி பேட்டிங் செய்வதில் எனக்கு பிரச்சனை இல்லை. ஏனென்றால் ஒரு கேப்டனாக அது என்னுடைய கூடுதல் கடமையாகும்” என ருத்துராஜ் கூறினார்.

சற்று முன்