- Advertisement -
Homeவிளையாட்டுருதுராஜுக்கு கிடைத்துள்ள ஜாக்பாட் வாய்ப்பு. இனி தேர்வு குழுவை யாருமே குறை சொல்லவே முடியாது. எல்லாம்...

ருதுராஜுக்கு கிடைத்துள்ள ஜாக்பாட் வாய்ப்பு. இனி தேர்வு குழுவை யாருமே குறை சொல்லவே முடியாது. எல்லாம் இனி அவர் கையில் தான் உள்ளது.

- Advertisement-

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அடுத்ததாக ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என மிகப் பெரிய தொடரில் பங்கேற்ற இருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டு, மேலும் சில சீனியர் வீரர்களுக்கும் ஓய்வளிக்கப்படும் என்று பேசப்பட்ட வேளையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான அணி வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற எந்த சீனியர் வீரர்களுக்கும் ஓய்வு வழங்கப்படாமல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு ரோகித் சர்மாவே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பர் இடத்தில் சஞ்சு சாம்சனுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இரண்டு வடிவங்களிலும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இப்படி பல கலவையான மாற்றங்கள் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்ட சிஎஸ்கே அணியின் நட்சத்திர துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. தனது திருமணத்தின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியை அவர் தவறவிட்ட வேளையில் தற்போது மீண்டும் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டு அணிகளிலும் இடம் பெற்றுள்ளார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை அணியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement-

ஒருவேளை இந்த தொடரில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தால் நிச்சயம் அவர் சிறப்பாகவே செயல்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் சிறிய இடைவெளிக்கு பிறகு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இருப்பினும் அவருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி கொள்வாரா? மாட்டாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் இதோ : 1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) ருதுராஜ் கெய்க்வாட், 4) விராட் கோலி, 5) சூரியகுமார் யாதவ், 6) சஞ்சு சாம்சன், 7) இஷான் கிஷன், 8) ஹர்டிக் பாண்டியா, 9) ஷர்துல் தாகூர், 10) ரவீந்திர ஜடேஜா, 11) அக்சர் பட்டேல், 12) யுஸ்வேந்திர சாஹல், 13) குல்தீப் யாதவ், 14) ஜெய்தேவ் உனட்கட், 15) முகமது சிராஜ், 16) உம்ரான் மாலிக், 17) முகேஷ் குமார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் இதோ : 1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) ருதுராஜ் கெய்க்வாட், 4) விராட் கோலி, 5) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 6) அஜின்க்யா ரஹானே, 7) கே.எஸ்.பரத், 8) இஷான் கிஷன், 9) ரவிச்சந்திரன் அஷ்வின், 10) ரவீந்திர ஜடேஜா, 11) ஷர்துல் தாகூர், 12) அக்சர் பட்டேல், 13) முகமது சிராஜ், 14) முகேஷ் குமார், 15) ஜெய்தேவ் உனட்கட், 16) நவ்தீப் சைனி.

சற்று முன்