- Advertisement -

எங்க விக்கெட் போனதும் பிளானை மாத்திட்டோம்.. சிமர்ஜீத் சிங் உள்ள வர காரணமே இதான்.. ருத்து வெளிப்படை..

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் தோல்வியடைந்து அதிக விமர்சனங்களை சந்தித்திருந்த சிஎஸ்கே, இரண்டாவது போட்டியில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் மூன்றாவது இடத்தில் முன்னேற்றம் கண்டுள்ளனர். சிஎஸ்கே அணி இந்த சீசனில் முதல் ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றிருந்த நிலையில் அடுத்த நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருந்தது.

லக்னோ அணிக்கு எதிராக தொடர்ச்சியாக நடந்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த சிஎஸ்கே, ஹைதராபாத் அணியை தங்களின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் வீழ்த்தி இருந்தது. அதே மைதானத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக பரிதாபமாக சிஎஸ்கே தோல்வியடைந்து போக, இதற்கு தக்க பதிலடியையும் தற்போது பஞ்சாபின் தரம்சாலாவில் அவர்களுக்கு கொடுத்துள்ளனர்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. சிஎஸ்கேவில் பந்துவீச்சு தற்போது அதிக வலிமை இல்லாமல் இருப்பதால், அவர்கள் மீண்டும் தோல்வி அடைவார்கள் என்றும் கருதப்பட்டது. ஆனால் மிகச் சிறப்பாக அவர்கள் செயல்பட, 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

பேட்டிங்கில் சிறப்பாக ஆடி 43 ரன்கள் சேர்த்த ரவீந்திர ஜடேஜா, பந்து வீச்சிலும் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார். இந்த வெற்றிக்கு பின் பேசியிருந்த சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ், “ஆரம்பத்தில் எங்களின் பேட்டிங் பார்த்தபோது 180 முதல் 200 ரன்களை அடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழுந்ததால் 160 முதல் 170 ரன்கள் நல்ல ஸ்கோர் என நினைத்தோம். இந்த போட்டியில் சிமர்ஜீத் சிங் உள்ளே வந்து விக்கெட் எடுத்திருந்தார்.

- Advertisement -

அவர் பயிற்சியிலும் கூட 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி வருகிறார். அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் அந்த அளவுக்கு தாமதமாகவில்லை என்றே நினைக்கிறேன். முதலில் இம்பாக்ட் பிளேயரில் பேட்ஸ்மேனை ஆட வைக்கலாம் என முடிவு செய்தோம். ஆனால் அப்படி வரும் வீரர், 10 முதல் 15 ரன்கள் வரை அடிப்பார். ஆனால் இவர் இரண்டு முதல் மூன்று விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தார்.

சில வீரர்கள் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்படுவதால் போட்டிக்கு முன் இன்று காலை வரை யார் ஆடுவார்கள், மாட்டார்கள் என்பது எங்களுக்கே தெரியவில்லை. ஆனால் அதே நேரத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியை தருகிறது” என ருத்து கூறினார்.

- Advertisement -

Recent Posts