- Advertisement -
Homeவிளையாட்டுஇதுனால தான் வங்கதேச டி20 தொடர்ல அவருக்கு இடம் கிடைக்கலையா.. ருத்துராஜுக்கு சரியான நேரத்தில் அடித்த...

இதுனால தான் வங்கதேச டி20 தொடர்ல அவருக்கு இடம் கிடைக்கலையா.. ருத்துராஜுக்கு சரியான நேரத்தில் அடித்த அதிர்ஷ்டம்..

- Advertisement-

இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று அபாரமாக இந்த தொடரை கைப்பற்றி பல சாதனைகளையும் புரிந்துள்ளது. முதல் டெஸ்டில் எளிதாக வென்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் மிக குறுகிய நேரத்தில் சரியாக திட்டம் போட்டு வெற்றி கனியை பறித்திருந்தது.

இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்திருந்தால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதில் சில சிக்கல்கள் உருவாகி இருக்கும்.

- Advertisement -

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் ஆடவுள்ள நிலையில் அதில் ஐந்துக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடி நிலை இந்தியாவிற்கு உருவாகி இருக்கும். ஆனால் தற்போது வங்கதேச அணிக்கு எதிராக அவர்கள் வெற்றி பெற்றுள்ளதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறுவதில் இந்திய அணியின் பாதை எளிதாகவே உள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அணி, அடுத்ததாக அவர்களுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் மோத உள்ளது. இதற்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பல வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement-

இதனிடையே கில், ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்ட போதிலும் அவர்களுக்கு நிகராக டி20 போட்டிகளில் டாப் 10 ரேங்கில் இருக்கும் ருத்துராஜிற்கு இடம் கிடைக்காமல் போனது அதிக விமர்சனத்தையும் சந்தித்திருந்தது. இந்திய அணிக்காக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறப்பாக ஆடியும் தொடர்ந்து ருத்துராஜ் புறக்கணிக்கப்பட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பி உள்ளது.

எப்படி ஆடினால் தான் வாய்ப்பு கொடுப்பீர்கள் என்றும், இதைவிட எப்படி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்றும் ருத்துராஜுக்கு ஆதரவாக குரல்களும் எழும்பி வந்தது. அப்படி ஒரு சூழலில் தான் அவரைப் பற்றிய மற்றொரு தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகமடையவும் வைத்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் தான் தொடக்க வீரர்களாக களமிறங்க போகின்றனர். இதில் ஜெய்ஸ்வாலின் பேக்கப் வீரராக இந்திய அணியில் ருத்துராஜ் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. துலீப் டிராபி தொடரில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்த ருத்துராஜ், அடுத்ததாக இராணி கோப்பையிலும், ரெஸ்ட் ஆப் இந்திய அணியை தலைமை தாங்க உள்ளார்.

இப்படி உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஜொலித்து வரும் ருத்துராஜ், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முக்கியமான தொடரில் தேர்வாகலாம் என்ற தகவல், ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

சற்று முன்