இந்திய பேட்ஸ்மேன் களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜிம்பாபே பவுலர் ஹென்றி ஒலாங்காவை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஒருமுறை ஜடேஜா கூறுகையில், சச்சின் டெண்டுல்கர் மிகவும் அப்செட் ஆக இருந்து ஒரு நாள் இரவு தூக்கம் இன்றி தவித்தார் அதற்கு காரணம் ஒலாங்காஅவரை அவுட் செய்தது தான். அவருடைய பந்து வீச்சானது மிகவும் அற்புதமாக மாறி இருந்தது என்று சச்சின் கூறியதாக ஜடேஜா கூறியிருந்தார்.
சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் இப்படி மூவரையும் தனது பௌலிங் மூலம் வீழ்த்தினார் ஒலாங்கா. ஒரு கட்டத்தில் சச்சினுக்கும் அவருக்கும் இடையே போட்டி அதிகரித்து அவருடைய பந்துகளை சச்சின் விளாசியதெல்லாம் வரலாறு கூறும்.
இப்படி சிறப்பான ஒரு ஃபாஸ்ட் பௌலராக இருந்த ஒலாங்காவின் இன்டர்நேஷனல் கிரிக்கெட் வாழ்க்கை எட்டு வருடங்களில் முடிவுற்றது. அவர் அதில் 126 விக்கெட்டுகளை விழித்தி இருந்தார். ஒலாங்காவின் கிரிக்கெட் வாழ்வு அஸ்தமனம் ஆனதற்கு காரணம், ஜிம்பாபே அரசுக்கு எதிரான அவரின் சில செயல்பாடுகள் தான்.
ஒரு கட்டத்தில் தேசத்துரோக குற்றச்சாட்டில் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதோடு அவர் உயிருக்கு அச்சுறுத்தலும் இருந்தது. இந்த நிலையில் தலைமறைவான அவர் இங்கிலாந்துக்கு நாடுகடத்தப்பட்டார். அவர் தனது கிரிக்கெட் கரியரில் மொத்தம் 50 ஒரு நாள் போட்டிகளையும் முப்பது டெஸ்ட் போட்டிகளையும் விளையாடி கடந்த 2003 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார்.
அதன் பிறகு அவர் தன்னுடைய வருங்காலத்தை எண்ணி பாடகராக தன்னுடைய தொழிலை ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அவர் தனது குடும்பத்தோடு ஆஸ்திரேலியா சென்றார் அங்க அவர் வீட்டில் இருந்தபடியே ஒரு சிறிய பாடகராக தனது பணியை தொடர அவரது மனைவி ஒரு டீச்சர் ஆக பணியாற்றி வந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தி வாய்ஸ் என்ற நிகழ்ச்சியில் இருந்து அவருக்கு எதிர்பாராத வகையில் ஒரு அழைப்பு வந்தது ஆனால் அவருக்கு அது பெரிதாக கை கொடுக்கவில்லை. கொரோனா சமயத்தின் போது அவருடைய வாழ்க்கை மிகவும் சிக்கலுக்கு உள்ளானது. வேலை எதுவும் இல்லாததால், அரசாங்க உதவியின் மூலம் மட்டுமே தனது குடும்பத்தை நடத்த வேண்டிய ஒரு சூழல் அவருக்கு ஏற்பட்டது. 2021 தான் அவர் தன் வாழ்க்கையில் சந்திக்க கொடூரமான வருடமாக பார்க்கிறார்.
தற்போது தனது வாழ்வின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள அவர், தனது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துக் கொண்டு செல்வது பிறகு அவர்களை வீட்டிற்கு அழைத்து வருவது, அதே சமயம் youtube சேனல் மூலம் தனது இசை வாழ்க்கையை மேம்படுத்த முயற்சிப்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார்