- Advertisement -
Homeவிளையாட்டுதமிழக வீரர் சாய் சுதர்சன பத்தி ரஷீத் கான் சொன்னதெல்லாம் கரெக்ட்தான் போலயே. சிஎஸ்கே-வையே தடுமாற...

தமிழக வீரர் சாய் சுதர்சன பத்தி ரஷீத் கான் சொன்னதெல்லாம் கரெக்ட்தான் போலயே. சிஎஸ்கே-வையே தடுமாற வைக்கற அளவுக்கு இவர்கிட்ட திறமை இருக்கே.

- Advertisement-

ஐபிஎல் இறுதி போட்டி நேற்று முன் தினம் நடக்க இருந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்டதால் ரிஸர்வ் நாளான நேற்று மாற்றப்பட்டது. இதையடுத்து நேற்று 7.30 மணிக்கு திட்டமிட்டது போல போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் விருத்திமான் சஹா ஆகியோர் களமிறங்கி சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 67 ரன்கள் சேர்த்தது. சுப்மன் கில் முதல் விக்கெட்டாய் 20 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு களமிறங்கிய சாய் சுதர்சன் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினார். முதலில் சிங்கிள், டபுள்ஸ் என ஓடி ரன்களை சேர்த்த அவர் கிடைக்கும் எளிதான பந்துகளில் பவுண்டரிகளையும் விளாசினார். விருத்திமான் சஹாவோடு இணைந்து சிறப்பாக விளையாடி ரன்ரேட் 10க்கு குறையாமல் பார்த்துக் கொண்டார்.

அரைசதம் அடித்த பின்னர் அதிரடியில் இறங்கிய சுதர்சன் அடுத்தடுத்து பவுண்டரிகளும் சிக்சர்களுமாக விளாசி மளமளவென ஸ்கோர் உயரக் காரணமாக இருந்தார். இந்த சீசனில் சென்னை அணிக்காக சிறப்பாக பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மதீஷா பதீரனா ஓவர்களிலும் சுதர்சன் பவுண்டரிகள் விளாசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement-

சிறப்பாக விளையாடி சதத்தை நெருங்கிய சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் பதீரனா பந்தில் எல்பிடபுள்யு முறையில் அவுட் ஆகி சதத்தை மிஸ் செய்தார். சுதர்சனின் இந்த இன்னிங்ஸில் 8 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடக்கம். 21 வயதாகும் சுதர்சனின் இந்த இன்னிங்ஸ் ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸாக அமைந்தது.இந்த போட்டியில் சதம் அடித்திருந்தால், இந்தியா அணிக்காக விளையாடாமல் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்திருப்பார்.

ஆனாலும் இப்போது ஐபிஎல் இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் சேர்த்த அன்கேப்ட் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். இதற்கு முன்னதாக சென்னை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியின் மன்வீந்தர் சிங் பிஸ்லா 93 ரன்கள் சேர்த்ததுதான் அன்கேப்ட் பிளேயர் ஒருவரால் சேர்க்கப்பட்ட அதிக ரன்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: ஐபிஎல் முடிந்த கையோடு பதிரானவுக்கு அடித்த ஜாக்பாட். எல்லாம் சிஎஸ்கேல விளையாடின நேரம் தான் என கூறும் சிஎஸ்கே ரசிகர்கள்.

இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான ப்ளே ஆஃப் போட்டி முடிந்த போது ரஷீத் கான் சாய் சுதர்சன் இந்திய அணிக்காக விரைவில் விளையாடி முக்கிய வீரராக இருப்பார் என்று கூறியதை இந்த இடத்தில் நினைவு கூறலாம். அவரது பேச்சில் ரஷீத் கான் “என்னைப் பொறுத்தவரை சுதர்சன் ஒரு வித்தியாசமான வீரர். அவரை நான் முதல் முதலாக வலைப் பயிற்சியில் பார்த்தபோதே அதை உணர்ந்தேன். அவர் பேட்டிங் ஸ்டைல், உழைப்பு அனைத்தும் போற்றத்தக்கது. இந்திய அணிக்கு விரைவில் அவர் விளையாடுவார். அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்