- Advertisement -
Homeவிளையாட்டுபைனலில் ஸ்ட்ராடஜிக் டைம் அவுட் சமயத்தில் நாங்கள் பேசிக்கொண்டது இது தான். தோனி எனக்கு இந்த...

பைனலில் ஸ்ட்ராடஜிக் டைம் அவுட் சமயத்தில் நாங்கள் பேசிக்கொண்டது இது தான். தோனி எனக்கு இந்த டிப்ஸ் எல்லாம் சொன்னாரு – சாய் சுதர்சன் பேச்சு

- Advertisement-

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் வெற்றி என்பது பெருமளவில் கொண்டப்படுகிறது. அதே வேலையில் குஜராத் அணி வீரர்கள் அந்த அணிக்காக எடுத்துக்கொண்ட சிரத்தைகளும் போற்றத்தக்கதாக உள்ளது. குஜராத்தை அணியை பொறுத்தவரை சுப்மன் கில் அவுட் ஆனவுடன் அந்த அணியின் கதை முடிந்தது என்று பலரும் நினைத்தனர்.

ஆனால் அந்த எண்ணங்களை மாற்றி அந்த அணியை சிறப்பான ஒரு நிலைக்கு கொண்டு சென்ற பெருமை தமிழக வீரரான சாய் சுதர்சனை சாரும். இறுதி போட்டியில் 47 பந்துகளில் 96 ரன்கள் அடிப்பதென்பது அவ்வளவு எளிதான ஒரு காரியம் அல்ல. அந்த கட்டத்தில் அதிகப்படியான ஒரு அழுத்தம் இருக்கும் ஆனால் அதை எல்லாம் கடந்து அவர் இதை செய்துளளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பைனல் போட்டிக்கு பிறகு சென்னை வந்தடைந்த சாய் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பைனலில் நடந்த சில நிகழ்வுகள் குறித்தும், மற்ற அணி வீரர்களோடு இருந்த சில உரையாடல்கள் குறித்தும் சில தகவல்களை கூறி உள்ளார். அது பற்றி அவர் கூறுகையில்,

பைனலில் நான் ஆடும்போது அணிக்கு என்ன தேவை என்பதை பற்றி மட்டுமே நான் யோசித்து ஆடினேன். எனக்கு பின்புறத்தில் தோனி கீப்பிங் செய்துகொண்டிருந்தார் அப்போது சில ஷாட்கலை அடித்துவிட்டு கிடைக்கும் நேரத்தில் அவரை பார்த்து பூரிப்படைந்தேன். அந்த நொடிகள் எல்லாம் உண்மையில் எனக்கு சிறப்பாக இருந்தது.

- Advertisement-

அதே போல ஸ்ட்ராடஜிக் டைம் அவுட் சமயத்தில் ஒரு சிறிய கேம் பிளான் இருந்தது. அதன் பிறகு கொஞ்சம் அதிக ரிஸ்க் எடுத்து எந்த பௌளரை டார்கெட் செய்யலாம், எந்த பௌலரின் பந்துகளில் இருந்து அதிக ரன்களை சேர்க்கலாம் போன்ற பேச்சுக்கள் எல்லாம் இருந்தது. அதன் காரணமாகவே தான் நான் தீக்சனா வீசிய ஓவரை டார்கெட் செய்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: ஹோட்டலை தாண்டி தோனியால் எதுவும் செய்ய முடியாது. ஒவ்வொரு பிட்சும் இப்படி தான் இருந்தது. எல்லாம் தோனியால் தான் – டெவோன் கான்வே பேச்சு

அதே போல குலைபைர் ஒன்றுக்கு பிறகு நான் தோனியை சென்னையில் பார்த்து பேசினேன். கிட்டத்தட்ட ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் நான் அவரோடு கிரிக்கெட் சம்மந்தமாக பல விடயங்களை பேசினேன். அவர் எனக்கு அந்த சமயத்தில் நெறைய டிப்ஸ் சொன்னார். அதை எல்லாம் நான் எதிர்வரும் போட்டிகளை நிச்சயம் பயன்படுத்துவேன் என்று கூறி உள்ளார் சாய்.

சற்று முன்