- Advertisement -
Homeகிரிக்கெட்தோனி பேசவே மாட்டார். தோனி கேப்டனாக இருந்த சமயத்துல அவர்கிட்ட இதெல்லாம் இருந்தது. அவரோடு இந்த...

தோனி பேசவே மாட்டார். தோனி கேப்டனாக இருந்த சமயத்துல அவர்கிட்ட இதெல்லாம் இருந்தது. அவரோடு இந்த பாக் கேப்டனை என்னால் ஒப்பிட முடியாது – சல்மான் பட்

-Advertisement-

இந்திய அணி இதுவரை கண்ட மிகச்சிறந்த கேப்டன்களில் மகேந்திர சிங் தோனியும் ஒருவர். அவர் தலைமையில் இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ரோபி ஆகிய மூன்று கோப்பைகளை வென்றுள்ளது. ஐசிசியின் இந்த மூன்று கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனிதான்.

தனது கேப்டன்ஸி முடிவுகளுக்காகவும், சிறப்பான தலைமைக்காகவும் தோனி, இன்றளவும் கொண்டாடப்படுகிறார். 2019 ஆம் ஆண்டே ஓய்வு பெற்று விட்ட தோனி இப்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை அவர் தலைமையில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தோனியின் கேப்டன்சிக்காக அவர் வேறு நாட்டு அணிகளின் பல்வேறு சிறந்த கேப்டன்களோடு ஒப்பிடப்பட்டு வருகிறார். பலரும் அவரை ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் ஆகியோரோடு ஒப்பிட்டு பேசி வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட், பாகிஸ்தானின் லெஜண்ட் கேப்டன் இம்ரான் கான் மற்றும் தோனியின் கேப்டன்சீயை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய சேனலில் பேசியுள்ள சல்மான் பட் “நீங்கள் இருவரையும் ஒப்பிட முடியாது. எம்எஸ் தோனி உலகின் சிறந்த பேட்டிங் வரிசையை தன்னுடைய கேப்டன்சி காலத்தில் கொண்டிருந்தார். மறுபுறம், இம்ரானுக்கு ஜாவேத் மியான்டட் எனும் ஒரே ஒரு லெஜண்ட் மட்டுமே இருந்தார். இம்ரான் ஒரு ஆல்-ரவுண்டராக இருந்ததால் அவரும் பேட்டிங் நன்றாக செய்வார். இருப்பினும் அந்த அணியில் மியான்டட் மட்டுமே பெரிய பேட்டர்.

-Advertisement-

இருவரின் அணியிலேயே இப்படி மிகப்பெரிய வித்தியாசம் இருந்ததால், நான் இருவரையும் ஒப்பிட விரும்பவில்லை. ஆனால் இருவரும் சிறந்த கேப்டன்கள் மற்றும் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பவர்கள். அதே சமயம் தங்கள் அணி வீரர்களை இருவருமே முழுமையாக ஆதரிப்பார்கள். அதே போல இம்ரான் அதிகமாக பேசக்கூடியவர் என்பதை அவரின் உடல் மொழியில் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். ஆனால் தோனி அவ்வளவாக பேசக்கூடியவர் அல்ல” என இருவர் பற்றியும் பேசியுள்ளார் சல்மான் பட்.

இதையும் படிக்கலாமே: ஐபிஎல் 2023-ல் மக்களால் அதிகம் ரியாக்ட் செய்யப்பட்ட போஸ்ட் எது தெரியுமா? அதுலையும் சிஎஸ்கே தான் டாப். செம மாஸான போஸ்ட் தான் அது.

இம்ரான் தன்னுடைய கேப்டன்சி காலத்தில் 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக உலகக்கோப்பையை வென்ற ஒரே கேப்டனாக திகழ்கிறார். அதன் பின்னர் அவர் அரசியலுக்கு வந்து பாகிஸ்தானுக்கு பிரதமர் ஆக சில ஆண்டுகள் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்