41 வயசுலயும் தோனி அசத்தறாரு. ஆனா ரோகித்? அவர் இத பண்றது தான் அவருக்கு நல்லது. முன்னாள் பாக்கிஸ்தான் வீரர் பேச்சு

- Advertisement -

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கோப்பையை வென்று 5வது முறையாக கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை மும்பை அணியோடு பகிர்ந்துள்ளது. இந்த முறை ஐபிஎல் பைனலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லை என்றே கூறலாம்.

அதே சமயம் மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிபயர் சுற்று வரை மட்டுமே முன்னேறியது. அதில் குஜராத்திடம் தோற்று வெளியேறியது. இந்த நிலையில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவையும், சென்னை அணியின் கேப்டன் தோனியையும் ஒப்பிடும்படி யூடியூப் லைவில் ரசிகர் ஒருவர் முன்னாள் பாக்கிஸ்தான் வீரர் சல்மான் பட்டிடம் கேட்ட, அதற்கு பின் நடந்தவை பின்வருமாறு.

- Advertisement -

இருவரின் பிட்னெஸ் குறித்து ஒப்பீடு செய்யும்படி கேட்டவுடன் அவர் சிரித்திவிட்டு “உலக அளவிற்கு” அவர்களுக்கு இடையே வேறுபாடு உள்ளது என கூறினார். அவர் தோனி குறித்து பெரிதாக எதுவும் கூறவில்லை ஆனால் ரோகித் சர்மா குறித்து கடுமையாக விமர்சித்தார்.

அவர்கள் இருவரும் முற்றிலும் வேறுபட்டவர்கள். இந்திய அணியின் கேப்டன் என்ற சிறப்பான ஒரு பட்டத்தை ரோகித் சர்மா பெற்றுள்ளார். அவர் எல்லா வகையிலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். உடல் தகுதி என்பது மிக முக்கியம். அவர் நிச்சயம் அதை மேம்படுத்தியே ஆகா வேண்டும். அப்படி மேம்படுத்தும் பட்சத்தில் அது அவருக்கு தன்மைபிக்கையை வளர்க்கும். அதோடு பேட்டிங்கிலும் அது அவருக்கு உதவும்.

- Advertisement -

அவர் ஏன் பிட்டாக இல்லை என்பது தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு அதற்கான காரணம் தெரியலாம். அதே வேலையில் தோனியை பொறுத்தவரை அவர் 41 வயதிலும் டெத் ஓவர்களில் இறங்கி சிறப்பாக ஆடுகிறார். அதோடு மின்னல் வேகத்தில் ஸ்டும்ப்பிங் செய்கிறார். இதை ஐ.பிஎல் பைனலில் நாம் பார்த்தோம் என்று கூறியுள்ளார்.

சல்மான் பட்டின் இந்த ஒப்பீடு ரோகித் சர்மாவின் ரசிகர்களுக்கு பெரும் எரிச்சலை உண்டாகி உள்ளது. அதே சமயம் இந்திய அணியை ரோகித் சர்மா சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கையில் இது பிற சில விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதை எல்லாம் பெரிது படுத்தவேண்டிய அவசியம் ரோகித்திற்கு இல்லை என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்