- Advertisement -
Homeவிளையாட்டுஎல்லாம் கோலியோட போச்சி. உங்களுக்கெல்லாம் சுத்தமா அக்கறையே இல்ல. அப்படி இருந்திருந்தா இத பண்ணி இருப்பிங்க...

எல்லாம் கோலியோட போச்சி. உங்களுக்கெல்லாம் சுத்தமா அக்கறையே இல்ல. அப்படி இருந்திருந்தா இத பண்ணி இருப்பிங்க – சல்மான் பட்ட பேச்சு

- Advertisement-

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களில் இந்தியா ஓரளவு போராடி நல்ல ஆட்டத்திற்கு திரும்பினாலும் ஐந்தாவது நாளில் விரைவாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா:

இன்னும் இறுதிப் போட்டிக்கு தயாராக அதிக நேரம் கிடைத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ரோஹித் சர்மா அளித்த கருத்து குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரரான சல்மான் பட் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியதாவது : உண்மையிலேயே உங்களுக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்திருந்தால் 2023-ஆம் ஆண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் வெளியேறி இருக்க வேண்டும்.

அதேபோன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி ஜூன் மாதம் ஏன் நடக்கிறது? என்று ரோகித் சர்மா கேட்டிருந்தார். அந்த கருத்திற்கு பதிலளித்த சல்மான் பட் கூறுகையில் : முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்காதபோது இது போன்ற விவாதங்கள் நடக்கத்தான் செய்யும்.

இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க வேண்டுமெனில் ஐபிஎல் தொடரை 20 நாட்கள் முன்னதாகவே முடித்திருக்க வேண்டும். அதேபோன்று இந்த இறுதி போட்டிக்கு முன்னதாக இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடும் அளவிற்கு 15 நாட்கள் முன்கூட்டியே இந்திய அணி இங்கிலாந்து சென்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement-

அதேபோன்று விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து வெளிநாட்டில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் செயல் திறன் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் சல்மான் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: கவலையே வேண்டாம், தோனி இதெல்லாம் மட்டும் செஞ்சா போதும். மனுஷன் 6 மாசத்துல ஐபிஎல்-கு ரெடி ஆகிடுவாரு – பயிற்சியாளர் ராஜாமணி பேச்சு

அதோடு விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணி சரிவை சந்தித்துள்ளது. அதோடு வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் நிலையான கேப்டன் அவசியம். அப்படி வெளிநாட்டு தொடர்களில் பெறும் வெற்றிகளின் அடிப்படையில் தான் கேப்டனின் மதிப்பும் கணக்கிட முடியும் என சல்மான் பட் கூறியுள்ளார்.

சற்று முன்