- Advertisement -

சிஎஸ்கே கூட தோத்துட்டோம்.. ஆனா, ஆர்சிபிய விடமாட்டோம்.. கங்கணம் கட்டித் திரியும் சாம் கரண்..

கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக சிஎஸ்கே அணிக்கு எதிராக தொடர்ந்து வெற்றிகளை பெற்றுள்ள பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய ஒரு முட்டுக்கட்டையை சென்னை அணி தற்போது போட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை அணிகள் மோதி இருந்தபோது சிஎஸ்கே அணி வெற்றி கண்டிருந்தது.

ஆனால் இதனைத் தொடர்ந்து அதே ஐபிஎல் தொடரில் இரண்டாவது லீக் போட்டியிலும் 2022 மற்றும் 23 ஆகிய சீசன்களிலும், இந்த சீசனில் முதல் போட்டியிலும் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளை பஞ்சாப்பிற்கு எதிராக சந்தித்திருந்தது. ஏறக்குறைய மூன்று வருடங்கள் பஞ்சாப் அணியை ஒரு போட்டியில் கூட வீழ்த்த முடியாமல் தவித்த சிஎஸ்கே அணி, தற்போது தரம்சாலாவில் வைத்து நடந்த போட்டியில் தக்க பதிலடியை பஞ்சாப்பிற்கு கொடுத்துள்ளனர்.

- Advertisement -

பஞ்சாப் அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டும் முதல் போட்டியில் சிறப்பாக அமைந்திருந்த சூழலில், இந்த முறை அவர்களின் பேட்டிங் சொதப்பி இருந்தது. 167 ரன்களில் பந்து வீச்சில் சிஎஸ்கேவை கட்டுப்படுத்த முடிந்த பஞ்சாப்பால், பேட்டிங்கில் சாதித்து பார்க்க முடியவில்லை.

இருபது ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்களை மட்டுமே அவர்கள் எடுத்திருந்ததால் இந்த தோல்வியின் காரணமாக, பஞ்சாப் அணியின் பிளே ஆப் வாய்ப்பும் மங்கிப் போயுள்ளது.

- Advertisement -

இந்த தோல்விக்கு பின் பேசிய பஞ்சாப் கேப்டன் சாம் கரண், “நாங்கள் நன்றாகவே பந்து வீசியதாக நினைக்கிறேன். ராகுல் சாஹர் மற்றும் ஹர்ஷல் படேல் நன்றாக பந்து வீசினர். முதல் பாதி எங்கள் பக்கம் இருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக அடுத்த பாதி எங்கள் பக்கம் அமையவில்லை. நாங்கள் நினைத்ததை விட பிட்ச் ஸ்லோவாக இருந்தது. நாங்கள் இன்னும் அதிக வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகும் என எதிர்பார்த்திருந்தோம்.

போட்டி முழுக்க அப்படி ஒரு நிலை தான் இருந்தது. ஆர்சிபி அணிக்கு எதிரான எங்களின் அடுத்த போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் இந்த போட்டியில் இருந்து கடந்து வந்து அந்த சமயத்தில் இன்னும் பலமாக திரும்பி வர வேண்டும்” என சாம் கரண் கூறினார்.

- Advertisement -
Published by

Recent Posts