- Advertisement -
Homeவிளையாட்டுபேட்டிங் செய்ய வந்தப்போ உண்மை தெரிஞ்சுது.. ராஜஸ்தான் தோக்க காரணமா இருந்த விஷயம்.. ரகசியம் உடைத்த...

பேட்டிங் செய்ய வந்தப்போ உண்மை தெரிஞ்சுது.. ராஜஸ்தான் தோக்க காரணமா இருந்த விஷயம்.. ரகசியம் உடைத்த சாம்..

- Advertisement-

பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் பலமாய் திகழ்ந்து வந்தாலும் சில போட்டிகளில் அதிர்ஷ்டம் கைகூடாமல் கடைசி ஓவர்களில் கூட தோல்வியை தழுவியதால் பிளே ஆப் முன்னேறும் வாய்ப்பையும் அவர்கள் இழந்திருந்தனர். சிஎஸ்கே அணிக்கு எதிராக நடந்த முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப், இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்ததால் அவர்களின் ப்ளே ஆப்பும் கேள்விக்குறியாகி கடைசியில் அதனை இழக்கும் சூழலும் உருவானது.

இந்த நிலையில் தான் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி சந்தித்திருந்தது. இந்த போட்டியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி, முதலில் பந்து வீசி 144 ரன்களில் ராஜஸ்தானையும் மடக்கி இருந்தனர். அந்த அணியில் ஹர்ஷல் படேல்,சாம் கரண் மற்றும் ராகுல் சாஹர் என மூன்று பேரும் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்து ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுக்க அவர்களால் பெரிய அளவில் ரன் சேர்க்க முடியாமலும் போனது.

- Advertisement -

இதனையடுத்து இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி பவுலிங்கை போல பேட்டிங்கிலும் ஜொலிக்க முடியாமல் போனது. 48 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை அவர்கள் இழந்ததால் ஓரளவுக்கு இலக்கை தொடுவதில் தடுமாற்றம் காண கேப்டன் சாம் கரண் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார். அவருடன் ஒரு கட்டத்தில் ஜிதேஷ் சர்மாவும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்ததால் பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருந்தது.

கடைசி 3 ஓவர்களில் 25 ரன்கள் தேவைப்பட, 11 பந்துகளிலேயே சாம் கரண் மற்றும் அசுதோஷ் ஷர்மா இணைந்து எட்டிப் பிடிக்க, பஞ்சாப் அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தாலும் தங்களின் 5 வது வெற்றியை இந்த சீசனில் ருசித்துள்ளனர். அதே வேளையில், ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக 4 வது தோல்வியையும் சந்தித்துள்ளனர்.

- Advertisement-

இந்த வெற்றிக்கு பின் பேசியிருந்த சாம் கரண், “ஒரு குழுவாக நாங்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி இருந்தோம். எல்லிஸ் தனது முதல் போட்டியிலேயே மிக அபாரமாக செயல்பட்டு இருந்தார். அவரை ஆரம்பத்திலேயே ஆட வைத்திருக்க வேண்டும் என தற்போது நினைக்கிறேன். மேலும் நான் பேட்டிங் ஆட சென்ற போது பிட்ச் கடினமாக இருந்ததாக பேர்ஸ்டோ என்னிடம் கூறினார். இதனால் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்காமல் பிட்ச்சின் சூழலை அறிந்து அதற்கேற்ற வயதில் ரன் சேர்த்தோம்.

மேலும் நானும் பேர்ஸ்டோவும் உலகக்கோப்பையை முன்னிட்டு கிளம்புகிறோம். ஒரு கேப்டனாகவும் இந்த சீசனில் நிறைய போட்டிகளை ரசித்து ஆடி இருந்தேன். இந்த சீசனில் நிறைய போட்டிகளை நாங்கள் மிக நெருக்கமாக சென்று தோல்வி அடைந்திருந்தோம். அணியிலும் நிறைய பாசிட்டிவான விஷயங்கள் இருப்பதால் வரும் சீசன்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த சீசனில் சஷாங்க் சிங் அசுதோஷ் ஷர்மா, ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டிருந்தனர்” என சாம் கரண் கூறினார்.

முன்னதாக ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசும் போது பிட்ச் பற்றி தெரிந்து ஸ்மார்ட்டாக பேட்டிங் செய்திருந்தால் நல்ல ஸ்கோர் அடித்திருக்கலாம் என கூறியிருந்தார். அதே வேளையில், சாம் கரண் பிட்ச் பற்றி தெரிந்து சிறப்பாக ரன் சேர்த்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்