- Advertisement -
Homeவிளையாட்டுசிஎஸ்கே வீரருக்காக கோலி செஞ்ச உதவி.. பல நாட்கள் கழித்து வெளியே தெரிய வந்த உண்மை..

சிஎஸ்கே வீரருக்காக கோலி செஞ்ச உதவி.. பல நாட்கள் கழித்து வெளியே தெரிய வந்த உண்மை..

- Advertisement-

இந்திய அளவில் உள்ளூர் போட்டிகள் நிறைய நடைபெற்று வந்தாலும் ஐபிஎல் தொடர் தான் இளம் வீரர்கள் பலருக்கும் சிறந்த ஒரு அறிமுகமாக இருந்து வந்தது. இதன் மூலம் தான் சர்வதேச அரங்கில் அவர்கள் காலடி எடுத்து வைக்கவும் வாய்ப்பு கிடைத்ததுடன் மட்டுமில்லாமல் உலக அளவில் பலரும் கவனிக்கும் வீரர்களாகவும் மாறி இருந்தனர்.

இப்படி பல சிறப்பம்சங்கள் ஐபிஎல் தொடருக்கும் இருக்க, அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த ஐபிஎல் சீசன் மூலம் கவனம் ஈர்த்தவர் தான் சமீர் ரிஸ்வி. இவரை ஏலத்தில் எட்டு கோடி ரூபாய்க்கு சென்னை அணி எடுக்கும் போது மிகப்பெரிய ஆவலும், யார் அந்த வீரர் என்ற ஒரு கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் உருவாகிவிட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணி ஒரு இளம் வீரர் மீது இத்தனை கோடி ரூபாய் முதலீடு செய்யும் போது நிச்சயமாக தரமான வீரராக இருப்பார் என அனைவருமே எதிர்பார்த்தனர். அதனை நிஜமாக்கும் வகையில் தனது ஐபிஎல் போட்டியில் முதல் ரன்னை சிக்ஸர்களாக மாற்றி பட்டையைக் கிளப்பி இருந்தார். அதுவும் ரஷீத் கான் பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விரட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியக்க வைத்திருந்தார்.

அடுத்து நடந்த போட்டிகளில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் 20 வயதாகும் சமீர் ரிஸ்வி, இனிவரும் தினங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிச்சயம் இந்திய அணியில் விரைவில் இடம் பிடிப்பார் என்றும் தெரிகிறது. அதே போல உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்து வரும் UPT20 லீக் தொடரிலும் கான்பூர் சூப்பர்ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக அவர் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement-

சமீர் ரிஸ்வி, தோனி தனக்கு மிகவும் பிடித்தமான வீரர் என்று பலமுறை கூறியுள்ள சூழலில் தற்போது விராட் கோலி பற்றி தெரிவித்த கருத்து அதிக கவனம் பெற்று வருகிறது. “விராட் கோலி மிக அற்புதமான மனிதர். நான் எப்போது எல்லாம் அவரிடம் பேசுகிறேனோ, அப்போதெல்லாம் என்னிடம் மிக எளிமையாக பேசுவார். அத்துடன் அனைத்து விஷயங்களை மிக சரியாக விளக்கி கொடுப்பார்.

கோலியிடம் பேசுவதே எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு பெரிய லெஜண்ட்டிடம் நாம் பேசுகிறோம் என்ற உணர்வை எப்போதும் அவர் எனக்கு கொடுத்ததில்லை. மிகவும் எளிமையாக என்னிடம் கோலி பேசுவதுடன் பேட்டிங் குறித்து நிறைய ஆலோசனைகளையும் கேட்டு தெரிந்து கொள்வேன்” என சமீர் ரிஸ்வி கூறி உள்ளார்.

சற்று முன்