இந்தியாவில் 4வது முறையாக ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கவுள்ள உலக கோப்பை தொடர், நவம்பர் 19ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 14ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கவுள்ளது.
இந்திய அணி தங்களின் முதல் போட்டியில் அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த சூழலில் உலக கோப்பை தொடருக்கான வீரர்களை தேர்வு செய்து தங்களுக்கு விருப்பமான அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என்று பலரும் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியும் உலக கோப்பை இந்திய அணியை தனது பார்வையில் எப்படி இருக்க வேண்டும் என்று வெளியிட்டுள்ளார். அந்த அணியின் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, திலக் வர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் மிடில் ஆர்டர் வீரர்களாக விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவை மட்டுமே கங்குலி தேர்வு செய்துள்ளார்.
அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியின் அனைத்து நட்சத்திர வீரர்களும் இடம்பெற்றிருந்தாலும், பலம் வாய்ந்த அணியாக இருக்கிறதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
குறிப்பாக ஆல் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின், விரிஸ்ட் ஸ்பின்னரான சாஹல், இளம் வீரர் திலக் வர்மா மற்றும் பேக் அப் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படவில்லை. மிடில் ஆர்டரின் எந்த வரிசையிலும் ஆடாத இஷான் கிஷனை விடவும், சஞ்சு சாம்சனே சிறந்த தேர்வு என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.