- Advertisement -
Homeவிளையாட்டுஒரு இன்ச்ல பறிபோன வெற்றி. கடைசி பந்தில் அவுட், ஆனால் நோ-பால்

ஒரு இன்ச்ல பறிபோன வெற்றி. கடைசி பந்தில் அவுட், ஆனால் நோ-பால்

- Advertisement-

ஐபிஎல் 16 ஆவது சீசனின் 52 ஆவது போட்டியில் நேற்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி, 59 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். மற்றொரு வீரரான சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்தார். இந்த அதிரடியான இன்னிங்ஸ்களால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட்களை இழந்து 214 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் அதிரடியாக விளையாடி, ரன்களைக் குவித்து இலக்கை நோக்கி சென்றது. ஆனாலும் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தவண்ணம் இருந்ததால், ராஜஸ்தான் கை ஓங்கி இருந்தது. ஒரு கட்டத்தில் ரன் ரேட் அதிகமாகிக் கொண்டே சென்ற நிலையில் சன் ரைசர்ஸ் அணியின் க்ளன் பிலிப்ஸ் சர்பரைஸாக ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி நம்பிக்கையை ஊட்டினார். ஆனால் அதே ஓவரில் அவர் அடுத்த பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் 7 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார்.

இந்நிலையில் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் சந்தீப் ஷர்மா வீசினார். அந்த ஓவரில் ஒரு சிக்சர் உட்பட முதல் 5 பந்துகளில் 12 ரன்களை சேர்த்தனர். இந்நிலையில் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்தை எதிர்கொண்டார் அப்துல் சமத். கடைசி பந்தில் அவர் அடித்த ஷாட் லாங் ஆனில் கேட்ச் ஆனது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி என்ற நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டது.

ரீப்ளையில் சந்தீப் க்ரீசை தாண்டி ஒரு இன்ச் அளவுக்கு காலை வெளியில் வைத்து பந்துவீசியது தெரியவந்தது. இதனால் மீண்டும் ஒரு பந்து வீசப்பட வேண்டும் என்ற சூழல் ஏறப்ட்டது. பின்னர் வீசப்பட்ட ப்ரீஹிட்டில் அப்துல் சமத் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி வாகை சூட வைத்தார்.

- Advertisement-

சிறப்பாக பந்துவீசிய சந்தீப் ஷர்மா, செய்த ஒரு சிறிய தவறால் அணியின் வெற்றி பறிபோனது. அதுவரை ஹீரோவாக ஜொலித்த சந்தீப் ஜீரோவாக, அப்துல் சமத் ஹீரோவானார். இந்த சீசனின்  ஹை வோல்டேஜ் ட்ராமாவாக நேற்றைய இந்த போட்டி அமைந்து, ரசிகர்களை பரவசத்துக்கு ஆட்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது.

சற்று முன்