ஐசிசி உலகக் கோப்பை அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், இதற்காக அனைத்து அணிகளும் தங்களது யுக்திகளை கணித்து வருகிறது. அதேபோல் நல்ல ஒரு பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மைதானங்கள் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளதால், எந்த அணி சிறப்பான சுழப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளார்களோ அந்த அணிக்கு இது வலு சேர்க்கும் வகையில் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் உலக கோப்பையை யார் வெல்வார்கள் என்று கணிப்பதே மிகவும் கடினமாக உள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அதிகப்படியான அதிரடி ஆட்டங்களை சமீப காலமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல் ஆசிய கோப்பையை எடுத்துக் கொண்டால் இந்திய அணியும் சிறப்பாக விளையாடி வருகிறது. சும்மன் கில், ரோகித் சர்மா போன்ற வீரர்கள் ஃபார்மிற்கு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஐசிசி ஈவண்ட்டில் கலந்து கொண்ட இலங்கை அணியின் முன்னாள் வீரரான சங்கக்கார, உலகக்கோப்பை போட்டி குறித்து பேசுகையில், “இந்த உலக கோப்பையை பொருத்தவரை இங்கிலாந்து மற்றும் இந்திய அணி உச்சத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
இலங்கை அணி ஆசிய கோப்பையில் விளையாடிய விதத்தை நான் பார்த்தால் அவர்கள் ப்ளே ஆப் பொசிஷனில் கண்டிப்பாக மற்ற அணிகளுக்கு சவாலாக இருப்பார்கள். பிளே ஆப் சுற்றில் வென்றால் அதன் பிறகு மற்றவை நல்லதாக நடக்கலாம். ஆனால் நாக் அவுட் போட்டிகளை பொறுத்தவரை அவர்களுக்கு அந்த நாள் சிறப்பாக இருக்க வேண்டும்.
தென்னாப்பிரிக்கா அணியில் கூட நிறைய நல்ல வீரர்கள் உள்ளார்கள். இங்கு ஏழு முதல் எட்டு அணிகள் உலக கோப்பையை வெல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால் இங்கிலாந்து மற்றும் இந்திய அணி தான் அதிகப்படியான பலத்தோடு உள்ளது என்று அவர் அவர் கூறியுள்ளார்.