- Advertisement -
Homeவிளையாட்டுதோனி அந்த ரிஸ்க் தெரிஞ்சு தான் கால் வைப்பாரு.. ஆனா கோலி கேப்டன்சி அப்டி இல்ல.....

தோனி அந்த ரிஸ்க் தெரிஞ்சு தான் கால் வைப்பாரு.. ஆனா கோலி கேப்டன்சி அப்டி இல்ல.. சஞ்சய் பாங்கர் பேட்டி..

- Advertisement-

இந்திய அணி கண்ட சிறந்த கேப்டன்களில் ஒருவர் என தோனியை கண் மூடிக்கொண்டே கைகாட்டி விடலாம். அந்த அளவுக்கு தோனியின் கேப்டன்சி சமயத்தில் இந்திய அணியில் நிறைய சாதனைகள் மற்றும் தாக்கங்கள் அமைந்திருக்க அதனை கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரும் தொடர்ந்து இந்திய அணியில் நிலைநாட்டி வருகின்றனர்.

2007 ஆம் ஆண்டு தொடங்கி இரண்டாவது 2017 ஆம் ஆண்டு வரை கேப்டனாக இருந்து மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த தோனி, பல இருதரப்பு தொடர்களில் வெளிநாட்டு மண்ணிலும் நிறைய சாதனைகளை படைத்திருந்தார். கேப்டன்சி பதவியை விராட் கோலி கையில் ஒப்படைத்த பின்னரும் இரண்டு ஆண்டுகள் சர்வதேச போட்டிகள் ஆடிவந்த தோனி, 2020 ஆம் ஆண்டு ஓய்வினை அறிவித்திருந்தார்.

தோனி கேப்டனாக இருந்த சமயத்தில் அனைத்து வடிவிலும் ஒரே ஆளாக பல தொடர்களை வழிநடத்தி வந்த நிலையில், கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் வருகைக்குப் பின்னர் நிறைய கேப்டன்கள் மாற்றம் நடைபெற்று வருகிறது. தோனி எப்படி அனைத்து வடிவுலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியை நம்பர் ஒன்னாக வைத்திருந்தாரோ அதேபோல விராட் கோலி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதுதான் உண்மை.

அப்படி ஒரு சூழலில் விராட் கோலி மற்றும் தோனி ஆகியோரின் கேப்டன்சி குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பேங்கர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “தோனி கேப்டனாக களத்தில் கால் வைப்பதற்கு முன்னர் எதிரணியிடம் இருக்கும் கடினமான விஷயங்கள் அனைத்தையும் பல விதத்திலும் யோசித்து பின்னர் களமிறங்குவார்.

- Advertisement-

மேலும் அந்த கடினமான விஷயங்களுக்கான திட்டங்கள் வகுத்து தனக்கு எல்லாம் தெரியும் என்று தோனியும் கால் பதிக்கும் சூழலில் அதன் பின்னர் தான் சில முடிவுகளை எடுப்பார். எதிரணி வீரர்கள் தவறு செய்வது வரை காத்திருந்து தனது திட்டத்தை செயல்படுத்தும் தோனி, ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறந்த கேப்டனாக திகழ்ந்தார்.

அதேபோல தனது அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு எதிரணியை திணற வைக்கும் கலையிலும் மாஸ்டராக திகழ்ந்த தோனி, போட்டியையும் மிக கூலாக கவனித்துக் கொள்பவர். ஆனால் விராட் கோலி கேப்டனாக இருந்த சமயத்தில் வெளிநாட்டு மண்ணில் தான் அதிகம் சாதிக்க வேண்டும் என்று துடிப்புடன் இருப்பார்.

தோனி பந்து வீச்சாளர்கள் கொண்டு திட்டம் போட, விராட் கோலி தனது பேட்ஸ்மேன்கள் நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டும் என நினைப்பார். பந்து வீச்சாளர்களுடன் பேட்ஸ்மேனுக்கே கூடுதல் பொறுப்பு என்பதில் நம்பிக்கையாக இருந்து செயல்படும் கோலி, தன்னுடன் இணைந்து ஆடும் பேட்ஸ்மேன்களையும் சிறந்த அறிவுரைகளின் படி அதிகமாக ரன் குவிக்க வைக்கவும் உதவுவார்” என சஞ்சய் பேங்கர் தெரிவித்துள்ளார்.

சற்று முன்