விராட் கோலி இந்திய அணியின் சிறந்த கேப்டனாக விளங்கிய சமயத்தில் அவர் பேட்டிங்கில் தடுமாற்றம் கண்டார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பாக ஒரு முறை தனது பேட்டிங்கை நினைத்து அவர் வருத்தப்பட்டு வந்து சூழலில் தோனியின் வார்த்தை ஒன்று அவரது கிரிக்கெட் பயணத்தை மாற்றியது பற்றி தற்போது பார்க்கலாம். தோனி இந்திய அணியின் கேப்டனாக பத்து ஆண்டுகள் ஆடி முடித்த பின்னர் அடுத்த தலைசிறந்த வீரராக இருந்து வந்தவர் தான் விராட் கோலி.
இதனால் தோனி போன்ற ஒருவரிடம் இருந்து முக்கியமான ஒரு பொறுப்பும் இந்திய அணி சார்பில் கோலியிடம் ஒப்படைக்கப்பட்டது. தோனி எந்த அளவுக்கு நேர்த்தியாக இந்திய அணியை வழிநடத்தினாரோ அதற்கு நிகராக வெளிநாட்டு மண்ணிலும் தொடரில் வென்று கால் பதிக்க முக்கிய காரணமாகவும் கோலி இருந்து வந்தார்.
ஆனால் எப்படிப்பட்ட வீரனாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் நிறைய விமர்சனங்களையும், தோல்விகளையும் சந்திக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் விராட் கோலிக்கும் அப்படி ஒரு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருந்தது. 2022 ஆம் ஆண்டு ஆசிய தொடருக்கு முன்பாக சுமார் 2 ஆண்டுகள் ரன் சேர்க்க முடியாமல் தினறிய கோலி, அதன் பின்னர் மீண்டும் ஃபார்மிற்கு திரும்பி இருந்தார்.
ஆனால் கோலி கேப்டனாவதற்கு முன்பாக தோனி தலைமையில் ஆடிய போதிலும் சில தடங்கல்கள் விராட் கோலிக்கு வந்து கொண்டே தான் இருந்தது. நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்தும் டெஸ்ட் போட்டிகளில் 200 ரன்களை அடிக்க முடியாமல் இருந்து வந்தார் கோலி. அப்போது 2016 ஆம் ஆண்டு தனது முதல் இரட்டை சதத்தை டெஸ்ட் போட்டிகளில் அடித்த விராட் கோலி, அடுத்த 17 மாதங்களில் 5 இரட்டை சதங்களையும் அடித்துள்ளார்.
இதற்கான காரணம் பற்றி இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பேசுகையில், “கோலி என்னிடம் எப்போதும் டெஸ்ட் போட்டிகளில் 200 ரன்களை அடிக்கவே முடியவில்லை என கூறிக் கொண்டே இருப்பார். ஆனால், அதன் பின்னர் அதற்கான செயலில் கோலி இறங்கி அதை நிறைவேற்றிய பின்னர், அதன் சுவையை உணர்ந்த பின்னர், அதே சீசனில் 4 முதல் 5 இரட்டை சதங்களையும் அடித்திருந்தார்.
கோலியின் அதீத விருப்பம் மற்றும் தன்னையே சோதித்து பார்த்த போது தான் எட்ட முடிந்தது” என சஞ்சய் பாங்கர் கூறி உள்ளார். தோனி எப்போதுமே போட்டியின் முடிவை பற்றி பார்க்காமல், உங்களின் செயல்பாட்டில் (Process) மட்டும் கவனம் செலுத்துங்கள் என கூறுவார். கிட்டத்தட்ட அதே ரூட்டில் கோலி கடினமாக உழைத்து இரட்டை சதங்களை அடித்து நொறுக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.