- Advertisement -
Homeவிளையாட்டுஇவர் மட்டும் இதை செய்தால் போதும்... இந்திய அணி வேற லெவலில் ஸ்கோர் செய்யும் -...

இவர் மட்டும் இதை செய்தால் போதும்… இந்திய அணி வேற லெவலில் ஸ்கோர் செய்யும் – சஞ்சய் பங்கர் அதிரடி கருத்து

- Advertisement-

கடந்த 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததை அடுத்து விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ரோகித் சர்மா புதிய கேப்டனாக பதிவியேற்றார். அவரது தலைமையில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணியானது 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கைப்பற்றும் என்று கருதப்படும் வேளையில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரோகித் சர்மா வெறும் 3 சதங்களை மட்டுமே விளாசியுள்ளார்.

அதோடு ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 27 சதங்களை விளாசியுள்ள அவர் இந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் சுப்மன் கில்லுடன் துவக்க வீரராக களமிறங்க காத்திருக்கிறார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் பாங்கர் இந்த உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா எப்படி விளையாடுவது அணிக்கு நல்லது என்று தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : ரோஹித் ஷர்மா 35 ஓவர்கள் வரை பேட்டிங் செய்து, பின்னனர் அதிரடியான ஆட்டத்தை துவங்கினால் இந்திய அணி 350 ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. ஆட்டத்தை தன்னுடைய கண்ட்ரோலில் ரோகித் சர்மா எடுக்க நினைத்தாலும், அவருடன் மற்றொரு அற்புதமான, பயமரியாத சுப்மென் கில் இருக்கிறார். அவர் ரோகித் சர்மா நிதானமாக விளையாட துணைபுரிந்து இந்திய அணி ஒரு பெரிய ஸ்கோரை எட்ட உதவுவார்.

இதன் மூலம் ரோகித் சர்மா அதிக ரிஸ்க் இல்லாத ஷாட்களை ஆடியே பெரிய அளவில் ரன்களை சேர்க்க முடியும். அதே வேலையில் அவருக்கும் சக வீரர்களுக்கும் பெரிய அளவில் அழுத்தம் இல்லாமலும் பார்த்துக்கொள்ள முடியும்.

- Advertisement-

இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்களை விளாசியுள்ள அவர் கடைசி கட்ட 10-12 ஓவர்களில் எந்த ஒரு பவுலராக இருந்தாலும் அதிரடியாக விளையாட கூடிய ஆற்றல் படைத்தவர். அதனால் அவர் 35 ஓவர்களுக்கு மேல் இருந்தால் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர் லபுசேன், ரோகித் சர்மா குறித்து பேசுகையில், அவர் மட்டும் அடிக்க துவங்கிவிட்டால் அவரை நிறுத்துவது கஷ்டம் என்று கூறி இருந்த நிலையில் தற்போது சஞ்சய் பாங்கர் கூறி உள்ள கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சற்று முன்