- Advertisement -
Homeவிளையாட்டுரோஹித், கோலி, பும்ரா இப்படி செய்யுறது நியாயமே இல்ல.. 5 வருசமா நடக்கும் அநீதி.. பொங்கிய...

ரோஹித், கோலி, பும்ரா இப்படி செய்யுறது நியாயமே இல்ல.. 5 வருசமா நடக்கும் அநீதி.. பொங்கிய சஞ்சய் மஞ்சரேக்கர்

- Advertisement-

முன்பெல்லாம் இந்திய அணியில் இடம்பிடித்து ஆடும் வீரர்கள் அடுத்தடுத்து நிறைய தொடர்களில் ஓய்வில்லாமல் ஆடி வருவார்கள். டி20 போட்டிகள் பல ஆண்டுகளுக்கு முன்பாக குறைவாகவே நடைபெற்று வந்த நிலையில் டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர்கள் தான் அதிகமாக நடைபெற்று வந்தது. இதன் முக்கியத்துவத்தை அறிந்து முன்னணி வீரர்கள் கூட எந்த போட்டிகளையும் தவறவிடாமல் தொடர்ந்து ஆடி வந்தனர்.

ஆனால் தற்போதுள்ள வீரர்கள் நல்ல ஃபிட்னஸில் இருந்த போதிலும் கூட சிறிய அணிகளுக்கு எதிரான தொடர் என வரும் போது அவர்கள் ஓய்வில் இருப்பது ஏற்கனவே பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட ஜூன் மாதம் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் ஆடியிருந்த ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் இலங்கைக்கு எதிரான தொடரில் இடம் பெற மாட்டார்கள் என்றும் ஓய்வில் இருப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியானது.

ஆனால் பயிற்சியாளராக கம்பீரின் வருகை ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரையும் இலங்கைத் தொடரில் மீண்டும் கொண்டு வர, பும்ராவுக்கு மட்டும் ஓய்வளிக்கப்பட்டது. கடந்த ஆண்டும் கூட உலக கோப்பை முடிவடைந்த பின்னர் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட பலரும் முக்கியமான தொடர்களில் இடம்பெறாமல் இருந்தது பெரிய அளவில் கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியிலேயே பரவலாக பேசப்பட்டு வந்தது.

அப்படி ஒரு சூழலில் தான் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு பின்னர் ஏறக்குறைய ஒன்றரை மாதங்கள் இந்திய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் அடுத்த மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆரம்பமாக உள்ள சூழலில், அதுவரை இந்திய வீரர்கள் ஓய்வில் இருப்பதும் பலரது மத்தியில் பேசுபொருளாக மாறி உள்ளது.

- Advertisement-

இந்த ஒன்றரை மாத இடைவெளியில் துலீப் கோப்பை நடைபெறவுள்ள நிலையில் பல இளம் வீரர்கள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர். ஜடேஜா, சிராஜ், உம்ரான் மாலிக் என இடம்பெற்ற பலரும் தற்போது விலக, அதற்கான காரணங்களும் சரிவர தெரியவில்லை. அப்படி இருக்கையில் தான் துலீப் டிராபி தொடரில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெற்றிருக்கலாம் என சஞ்சய் மஞ்சரேக்கர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு முக்கியமான ஒரு புள்ளி விவரங்கள் விவரத்துடனும் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், “இந்தியா கடந்த ஐந்து ஆண்டுகளில் 249 சர்வதேச போட்டிகளில் ஆடி உள்ளது. அதில் ரோஹித் ஷர்மா 59 சதவீத போட்டிகளில் மட்டும் தான் ஆடியுள்ளார். விராட் கோலி 61 சதவீதமும், பும்ரா 34 சதவீதமும் ஆடியுள்ளனர்.

அவர்கள் நல்ல ஓய்வில் இருக்கும் இந்திய வீரர்களாகவே நான் பார்க்கிறேன். இவர்களை நிச்சயம் துலீப் கோப்பையில் தேர்வு செய்திருக்க வேண்டும்” என இந்திய அணி மீது கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.

சற்று முன்