- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க ரோஹித்.. டீம் நல்லதுக்காக கோலி இப்படி தான் ஆடணும்.. மஞ்சரேக்கர்...

இந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க ரோஹித்.. டீம் நல்லதுக்காக கோலி இப்படி தான் ஆடணும்.. மஞ்சரேக்கர் கோரிக்கை.

- Advertisement 1-

டி20 உலக கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக உள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் ஆடி இருந்த பெரும்பாலான சர்வதேச வீரர்கள் நிச்சயம் மிகப்பெரிய உத்வேகத்தையும் பெற்றுள்ளனர் என்றே தெரிகிறது.

அந்த அளவுக்கு ஐபிஎல் தொடரில் பலநாடு வீரர்கள் இணைந்து ஆடி இருந்ததால் அவர்களின் ட்ரிக் மற்றும் நுணுக்கங்கள் எந்த வகையில் இருக்கும் என்பதையும் நிச்சயம் பலரும் தெரிந்து கொண்டிருப்பார்கள். இதனால் ஐபிஎல் போட்டிகள் களைகட்டியது போல நிச்சயம் டி 20 உலக கோப்பை போட்டிகள் களைக்கட்டும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்திய அணியும் சமீபத்தில் அமெரிக்காவுக்கு கிளம்பிச் சென்றிருந்தது.

கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் இந்திய அணியின் மூத்த வீரர்களாக ஆடத் தொடங்கியதன் பின்னர் அவர்கள் எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லாமல் இருந்து வருவது கடந்த பல ஆண்டுகளாகவே ரிசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு வேதனையாக தான் இருந்து வருகிறது.

கடந்த ஆண்டில் கூட இந்தியாவில் வைத்து நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எதிர்பாராத நேரத்தில் தோல்வி அடைந்திருந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக மாறி இருந்தது.

- Advertisement 2-

இதனால் அதில் உள்ள தவறுகள் அனைத்தையும் சரி செய்து கொண்டு நிச்சயம் ரோஹித் மற்றும் கோலி கூட்டணி முதல் முறையாக ஒரு ஐசிசி கோப்பையை வெல்லும் வகையில் இருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த டி 20 உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் தான் எடுத்திருந்தது. அதில் முதல் பத்து ஓவர்களில் 62 ரன்கள் சேர்த்தது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இதில் ரோஹித் 28 பந்துகளில் 27 ரன்களும், விராட் கோலி 40 பந்துகளில் 50 ரன்கள் அடித்து 18 வது ஓவரில் தான் அவுட்டாகி இருந்தார்.

அங்கேயே இந்திய அணி தொடரை இழந்துவிட்டது. ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்கள் அடித்ததால் தான் இந்திய அணி ஓரளவுக்கு நல்ல ரன்னையும் எட்டி இருந்தது. அதனையும் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 16 வது ஓவரிலேயே எட்டி பிடித்திருந்தது.

ஆனால் இந்த முறை ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் அதே தவறை திரும்ப செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டி 20 வீரரான கோலி தற்போது இல்லை. அவர் தன்னைப் பற்றி மிக ஆழமாக தெரிந்து கொண்டுள்ள நிலையில், அவரைப் பற்றி வெளியே வரும் விமர்சனங்களால் இன்னும் சிறப்பான டி 20 பேட்ஸ்மேன் ஆகவும் தன்னை மெருகேற்றி உள்ளார்.

ஆனால் நாக் அவுட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக அவர் நிலைத்து நின்று விளையாடுவதை காட்டிலும் வேகமாக ரன்கள் அடிக்கவே முயற்சி செய்ய வேண்டும்” என சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

சற்று முன்