- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலி அதுக்கு தகுதியான ஆளே இல்ல.. ஹர்திக் பாண்டியா வாய்ப்பை கலைச்சுட்டாரு.. மஞ்சரேக்கர் ஆவேசம்..

கோலி அதுக்கு தகுதியான ஆளே இல்ல.. ஹர்திக் பாண்டியா வாய்ப்பை கலைச்சுட்டாரு.. மஞ்சரேக்கர் ஆவேசம்..

- Advertisement 1-

இந்திய அணி தட்டுத் தடுமாறி கடைசி ஐந்து ஓவர்களில் பந்து வீச்சாளர்கள் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தி, 13 ஆண்டுகால உலக கோப்பை தாகத்திற்கு முற்றுப்புள்ளியும் வைத்தாகி விட்டது. இந்த தொடர் முழுக்க முதலில் 7 போட்டிகள் விளையாடி 75 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த விராட் கோலி, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இறுதி போட்டியில் 76 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்தார்.

அவர் தொடக்க வீரராக ஆடி வருவது தான் ஃபார்ம் அவுட்டுக்கு முக்கிய காரணம் என பல விதமான விமர்சனங்கள் இருந்து வந்தது. அரையிறுதி போட்டியிலும் அவர் 9 ரன்களில் அவுட்டாகி போக, இந்திய அணி வென்றதற்கு பின்னர் இது பற்றி பேசி இருந்த கேப்டன் ரோஹித் ஷர்மா, இதுவரை சிறப்பாக ஆடாதது எல்லாம் சேர்த்து இறுதி போட்டியில் அவர் சிறப்பாக ஆடுவார் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தை நிஜமாக்கும் விதத்தில், ரோஹித், ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் அவுட்டாகி சென்ற போது அக்சர் படேலுடன் இணைந்து பேட்டிங் மூலம் துவண்டு போன தனது ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் கொடுத்திருந்தார் கோலி. தேவைப்படும் நேரத்தில் நிதானமாகவும், அதே வேளையில் ரன்கள் குறையும் போது பவுண்டரிகளையும் பறக்க விட்டு அசர வைத்திருந்தார் கோலி.

இதனால், அவர் மீதான விமர்சனமும் தகர்ந்து போக, இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்தார். அப்படி ஒரு சூழலில், டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருது வெல்ல தகுதி உடையவர் இல்லை என சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

இது பற்றி அவர் பேசுகையில், “விராட் கோலி மிக நிதானமாக ஆடி ரன் சேர்த்ததால் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்டியாவிற்கு இரண்டு பந்துகள் மட்டுமே எதிர்கொள்ள வாய்ப்பு கிடைத்திருந்தது. இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. ஆனால் விராட் கோலியின் பேட்டிங் இந்திய அணியை ஒரு நெருக்கடியான நிலைக்கு தள்ளியது என்றே நான் நினைக்கிறேன்.

அவரது ஆட்டத்தால் கடைசி கட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நெருக்கடியும் உருவானது. தென்னாப்பிரிக்காவுக்கு தான் 90 சதவீத வெற்றி வாய்ப்பு இருந்தது. பந்து வீச்சாளர்கள் திருப்புமுனை ஏற்படுத்தியது தான் கோலியின் இன்னிங்ஸை காப்பாற்றி இருந்தது. ஏனென்றால், அவர் 128 ஸ்ட்ரைக் ரேட்டில் தான் ஆடி இருந்தார்.

என்னை பொறுத்தவரையில் ஒரு பந்து வீச்சாளர் தான் ஆட்ட நாயகன் விருதினை வென்றிருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் தோல்வியின் பிடியில் இருந்த இந்தியாவை மீட்டெடுத்து வந்தனர்” என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார். ஆனால், சஞ்சய் கூறியது போல கோலி அதிரடியாக ஆட நினைத்து விக்கெட்டை இழந்திருந்தால் இந்த ரன்னை கூட இந்தியா எட்டி இருக்காது என்பது தான் பல கிரிக்கெட் பிரபலங்களின் கருத்தாக உள்ளது.

சற்று முன்