உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் ஒரு சில மாதமே உள்ள நிலையில் அனைத்து அணியினரும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற அணிகள் முழு பலத்துடன் களம் இறங்க இருக்கிறது. ஆனால் நமது இந்திய அணியில் இன்னமும் நான்காவது வரிசையில் இறங்கும் வீரர் பற்றிய குழப்பம் நீடித்து வருகிறது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறுகையில், இந்த நம்பர் 4 ஸ்லாட் பிரச்சனை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. நாங்களும் பல முயற்சிகளை செய்து வருகிறோம். ஆனாலும் இந்த பிரச்சனை நீண்டு கொண்டே இருக்கிறது. ஹானஸ்ட்டாக சொல்ல வேண்டுமென்றால் யுவராஜ் சிங்கிற்கு பிறகு நம்பர் 4 இடத்திற்கு சரியான வீரர் பொருந்தவில்லை.
ஒரு வீரரானவர் குறிப்பிட்ட இடத்தில் இடத்தில் களமிறங்காமல் அணியின் தேவைக்கேற்ப அனைத்து இடத்திலும் பேட்டிங் செய்ய தயாராக இருக்க வேண்டும் என கேப்டன் ரோஹித் மழுப்பலான ஒரு பதிலை கூறினார். இந்த நிலையில் நம்பர் 4 இடத்தை பற்றி ரவி சாஸ்திரி ஒரு சர்ச்சையான கருத்தை பதிவு செய்துள்ளார்:
2019 உலகக்கோப்பக்கு முன்னரே நானும் அப்போதைய தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாதும் நம்பர் 4 இடத்தை நிரப்புவதற்காக சில வியூகங்களை வகுத்தோம். ஆனால் அதை செயல்படுத்தவில்லை. எனவே இப்போது வரவிருக்கும் உலகக் கோப்பைக்கு நம்பர் 4 இடத்தை பூர்த்தி செய்ய விராட் கோலியை பொருத்துவது கச்சிதமாக இருக்கும் என ரவி சாஸ்திரி கூறினார்.
ரவி சாஸ்திரியின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணையாளருமான சஞ்சய் மஞ்ரேகர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
ரவி சாஸ்திரியின் யோசனை கோலியை பலிகடா ஆக்குவது போல் உள்ளது. கோலியை நம்பர் 4-இல் இறக்கிவிடுவதால் உங்கள் பிரச்சனை தீர்ந்து விட்டது என எண்ணி விடாதீர்கள். அது அவரை பலிகடா ஆக்கும் செயல். 16 ஆண்டுகளுக்கு முன் சச்சினுக்கு என்ன நேர்ந்தது என்பதை நீங்கள் நினைவு கூற வேண்டும். அவர் வழக்கத்துக்கு மாறான ஓப்பனிங் ஸ்லாட்டிற்கு பதிலாக நான்காம் இடத்தில் இறங்கியதால் அவர் எதிர்பார்த்த அளவில் சோபிக்கவில்லை. இதை எல்லாம் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். எனினும் விராத் கோலி நம்பர் 4 இடத்தில் உலகக்கோப்பையில் ஆடுவதென்பது அவர் முடிவு செய்ய கூடிய ஒன்றாகும் என சஞ்சய் மஞ்ரேகர் தெரிவித்தார்.
இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் தொட்டாகணேஷ் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்: உங்கள் அணியின் சிறந்த வீரர் அவரது வழக்கமான இடத்தில் ஆட வேண்டும். நம்பர் 4 இடத்தில் யாரும் சரி வரப் பொருந்தாததால் அந்த இடத்தில் கோலியை நிரப்புவது வேடிக்கையானது. 2007 இல் சச்சினுக்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள் என காட்டமாக கூறியுள்ளார்.