- Advertisement 3-
Homeவிளையாட்டுநான் மூடிட்டு இருக்குறது நல்லது.. ஜடேஜா பேட்டிங்கை சைலண்டாக விமர்சித்த சஞ்சய் மஞ்சரேக்கர்..

நான் மூடிட்டு இருக்குறது நல்லது.. ஜடேஜா பேட்டிங்கை சைலண்டாக விமர்சித்த சஞ்சய் மஞ்சரேக்கர்..

- Advertisement 1-

ஐபிஎல் தொடர் முடிந்த சூழலில், அதே போன்றொரு எதிர்பார்ப்பில் டி20 உலக கோப்பை தொடரும் ஆரம்பமாகியுள்ளது. இதன் முதல் போட்டியில் USA மற்றும் கனடா ஆகிய அணிகள் மோதி வரும் நிலையில் சமீபத்தில் கடைசி பயிற்சி போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் எடுத்திருந்தது.

அதிகபட்சமாக ரிஷப் பந்த் 53 ரன்களும், ஹர்திக் பாண்டியா 40 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த இரண்டு பேருமே சமீபத்திய தொடர்களில் அதிகம் ஆடாமல் இருந்து வந்த நிலையில், இவர்கள் இரண்டு பேரும் தற்போது உலக கோப்பை தொடரை முன்னிட்டு ஃபார்முக்கு வந்துள்ளது நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய உத்வேகமாக இருக்கும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது..

இனிவரும் போட்டிகளிலும் மிடில் ஓவர்களில் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா இந்த ஆட்டத்தை தொடங்கினால் நிச்சயம் இந்திய அணி வெற்றிகளை குவித்து உலக கோப்பையும் எளிதாக வென்று விடலாம். ஆனால் அதே வேளையில் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே உள்ளிட்டோர் இந்த போட்டியில் ரன் சேர்க்கவே தடுமாற நிச்சயம் லீக் போட்டிகளில் நல்ல ஃபார்முக்கு வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல ஜடேஜாவும் கடைசி கட்டத்தில் பேட்டிங் இறங்கி ஆறு பந்துகளில் 4 ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தார். இதனிடையே ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்த போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனையில் சொன்ன வார்த்தை அதிகம் வைரலாகி வருகிறது.

- Advertisement 2-

இந்திய அணியின் இலக்கை நோக்கி ஆடிய பங்களாதேஷ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் தான் எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற ஜடேஜா பேட்டிங் செய்தபோது நடந்த சம்பவத்தை பார்க்கலாம். அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கீப்பர் ஸ்டம்பிங் செய்தார்.

ஆனால் இதற்கு நாட் அவுட் கொடுக்கப்பட, அந்த சமயத்தில் வர்ணனையில் இருந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “இங்கிருந்து பார்க்கும்போது அவுட் போல தான் தெரிகிறது. ஆனால் ஜடேஜா பேட்டிங் செய்வதால் நான் எதுவும் பேசாமல் இருப்பதே நல்லது” என கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக சஞ்சய் மஞ்சரேக்கர் ஜடேஜாவின் ஆல் ரவுண்டர் திறனை விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த ஜடேஜா, ‘உங்களை விட இருமடங்கு சர்வதேச போட்டிகள் ஆடி உள்ள ஒரு வீரருக்கு மரியாதை கொடுக்க வேண்டும்’ என்பது போன்ற கருத்துக்களையும் தெரிவித்திருந்தார். இப்படி தொடர்ந்து ஜடேஜாவின் ஆல் ரவுண்டர் திறனை சஞ்சய் விமர்சித்து வர அதற்கு தனது பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்தும் வருகிறார்.

சற்று முன்