- Advertisement -
Homeவிளையாட்டுஇந்த சிஎஸ்கே வீரர் மேல எனக்கு பெரிய எதிர்பார்ப்புலாம் இல்ல. உலககோப்பைல அவர் ஒன்னும் பெருசா...

இந்த சிஎஸ்கே வீரர் மேல எனக்கு பெரிய எதிர்பார்ப்புலாம் இல்ல. உலககோப்பைல அவர் ஒன்னும் பெருசா வித்யாசமாலாம் ஆடிட மாட்டாரு – சஞ்சய் மஞ்சுரக்கர் கருத்து

- Advertisement-

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. வரும் ஜூன் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவிருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் அஜின்க்யா ரஹானே இடம் பெற்றுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர் அதன் பிறகு மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார்.

இந்நிலையில் அதனை தொடர்ந்து இந்திய அணியின் முக்கிய வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரது காயம் காரணமாக மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ஏனெனில் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் தனது விடாமுயற்சியை எப்போதும் நிறுத்தாத ரஹானே உள்ளூர் தொடர்களில் மிகவும் சிறப்பாக விளையாடி 600-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தார்.

அதோடு பி.சி.சி.ஐ-யின் வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டாலும் ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது பேட்டிங் திறனை அவர் வெளிகாட்டியதால் இந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் ரஹானே முன்பை விட தற்போது இன்னும் ரிலாக்ஸாக இந்த இறுதிப் போட்டியை அனுகுவார் என்றும் இதன் காரணமாக அவர் தனது ஓய்வு முடிவையும் தள்ளி வைப்பார் என சஞ்சய் மஞ்சுரக்கர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement-

தற்போதுள்ள ரஹானேவின் பார்மை பார்க்கும்போது நிச்சயம் அவர் இன்னும் ரிலாக்ஸாக விளையாடுவார். ஆனாலும் அவரிடம் இருந்து நாம் நிறைய எதிர்ப்பார்க்க கூடாது. அவர்மீது எதிர்பார்ப்பினை நான் வைக்கமாட்டேன் அவர் தற்போது ஒரு கெடுபிடியான சூழலில் உள்ளார் என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர்:

இதையும் படிக்கலாமே: பைனல் முடிந்த கையோடு தோனியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய ருதுராஜின் வருங்கால மனைவி – வைரல் வீடியோ

அஜின்கியா ரஹானே சர்வதேச போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டாலும் அதனை தொடர்ந்து ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி நல்ல நம்பிக்கையை பெற்றுள்ளார். இந்த இறுதி போட்டியில் வித்தியாசமான ரஹானேவை நாம் பார்க்க முடியாது. ஒருவேளை அவர் நன்றாக விளையாடினால் அது அணிக்கு நம்பிக்கையை அளிக்கும், அவருக்கும் அது நல்லது எனவே அவரிடம் இருந்து அதிகப்படியான எதிர்பார்ப்புகளை நாம் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி இருப்பினும் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்புவதாக சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்