- Advertisement 3-
Homeவிளையாட்டுலக்கி சார்ம்யா நீ.. ஒரு மேட்ச் கூட ஆடாம கம்பீர், ரோஹித்தின் முக்கிய சாதனைக்கு காரணமா...

லக்கி சார்ம்யா நீ.. ஒரு மேட்ச் கூட ஆடாம கம்பீர், ரோஹித்தின் முக்கிய சாதனைக்கு காரணமா இருந்த சாம்சன்..

- Advertisement 1-

இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றது ஒரு பக்கம் இருக்க, இந்த தொடரில் சில முக்கியமான வீரர்கள் இடம்பெற்றிருந்ததும் அதிக அளவில் கவனத்தை ஏற்படுத்தி இருந்தது. சாஹல் நம்பர் 1 டி20 பவுலராக இருந்த போதிலும் அவருக்கான வாய்ப்பு இந்திய அணியில் தொடர்ந்து கிடைக்காமல் இருந்து வந்தது. அப்போது தான் ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார்.

இதே போல, ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து பல சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்தி இருந்த சஞ்சு சாம்சனுக்கும் இந்திய அணியில் பல ஆண்டுகளுக்கு பிறகு இடம் கிடைத்திருந்தது. இரு தரப்பு தொடரில் மட்டுமே பெரும்பாலும் தேர்வாகி வரும் சஞ்சு சாம்சனுக்கு ஏதாவது ஒரு போட்டியில் தான் வாய்ப்பும் கிடைக்கும்.

அந்த சமயத்தில் அவர் சிறப்பாக ஆடாமல் போக, அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பும் மறுக்கப்பட்டு வந்தது. இந்திய அணியில் இடம்பிடித்து ஆடிய மற்ற பல பேட்ஸ்மேன்களை விட சஞ்சு சாம்சன் சிறந்தவராக இருந்த போதிலும் அவருக்கு ஏன் வாய்ப்பே கிடைக்கவில்லை என்பதே பெரிய குழப்பம் தான்.

ஒருமுறை கூட உலக கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்க, இதுபற்றி அவரே கூட பேசத் தொடங்கி விட்டார். ஆனாலும் அயராது உழைத்து வந்த சஞ்சு சாம்சன், ஐபிஎல் தொடரில் கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் என இரண்டிலும் ஜொலித்து இந்திய அணியில் தனக்கான இடத்தையும் பிடித்திருந்தார்.

- Advertisement 2-

அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், உலக கோப்பை அணியில் இருந்ததே பெரிய விஷயம் தான் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் இனி வரும் ஐசிசி தொடர்களிலும் நிச்சயம் சஞ்சு சாம்சன் இடம்பிடித்து ஆடும் லெவனில் தேர்வாகும் வாய்ப்பும் கிடைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர்.

இதனிடையே, இந்திய அணி உலக கோப்பை ஜெயித்த 4 முறையும் அதில் கேரள வீரர்கள் இடம்பெற்றிருந்த சிறப்பான ஒற்றுமை பலரையும் அசர வைத்திருந்தது. கேரள வீரர்கள் இடம்பிடித்திருந்த உலக கோப்பைத் தொடரை மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது. மற்றபடி தோல்வி அடைந்த எந்த உலக கோப்பைத் தொடரிலும் கேரள வீரர்கள் இடம்பெறவில்லை என்பது சிறப்பம்சமான விஷயம்.

இந்த பெருமை சஞ்சு சாம்சனுக்கும் கிடைக்க தற்போது இன்னும் ஒரு பெருமையும் ஒரு உலக கோப்பை போட்டியில் கூட ஆடாமல் பெற்றுள்ளார். முன்னாள் இந்திய வீரர் யூசுப் பதான், வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரைன் ஆகியோர் தாங்கள் ஆடிய முதல் ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பை என இரண்டையும் வென்ற அணிகளில் இடம்பிடித்திருந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது அந்த பெயர் சஞ்சு சாம்சனுக்கும் கிடைத்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு சாம்சன் ஆடிய முதல் ஐபில் தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்தார். அப்போது அவர்கள் தான் கோப்பையை வென்றிருந்தனர். கேப்டனாக கம்பீர் முதல் ஐபிஎல் கோப்பையை வெல்ல இதே போல, சாம்சன் இடம்பிடித்த முதல் டி20 உலக கோப்பைத் தொடரிலேயே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் ஒரு போட்டியில் கூட சாம்சன் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்