- Advertisement -
Homeவிளையாட்டுஇந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த சஞ்சு சாம்சன்.. கூடவே சர்ப்ரைஸாக இணைந்த அந்த தமிழக வீரர்!!

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த சஞ்சு சாம்சன்.. கூடவே சர்ப்ரைஸாக இணைந்த அந்த தமிழக வீரர்!!

- Advertisement-

உலக கோப்பைத் தொடரில் இரண்டாம் இடம் பிடித்திருந்த இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்து டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது.

உலக கோப்பையில் ஜொலித்த இந்திய வீரர்களான ரோஹித், கோலி, ஷமி உள்ளிட்ட பல வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள சூழலில், சூர்யகுமார் யாதவ் தலைமையில் ருத்துராஜ், ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் என இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, டி 20 தொடரில் ஆடி வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகளின் முடிவில், இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால் இந்திய அணி உத்வேகத்துடன் அதற்காக தயாராகி வருகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடர் முடிந்த கையுடன் தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 3 டி 20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் ஆடுகிறது. டிசம்பர் 10 ஆம் தேதி, டி 20 தொடர் ஆரம்பமாக உள்ள சூழலில், இதற்கான இந்திய அணியில் யார் எல்லாம் இடம்பெறுவார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்தனர்.

அதன்படி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 தொடர்களுக்குமான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. டி 20 தொடரில், சூர்யகுமார் யாதவ் தலைமையில் ஜெய்ஸ்வால், ருத்துராஜ், திலக் வர்மா, ரிங்கு சிங் உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதே போல சிராஜ், குல்தீப் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்களும் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.

- Advertisement-

தொடர்ந்து, 3 ஒரு நாள் போட்டி தொடரின் கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக வீரர் சாய் சுதர்சன் பெயரும் இடம்பெற்றுள்ள சூழலில், ராஜத் படிதர், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட வீரர்களுக்கும் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் விட, சஞ்சு சாம்சன் மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளது ரசிகர்கள் பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சிறந்த மிடில் ஆர்டர் வீரராக சஞ்சு சாம்சன் இருந்த போதும் தொடர்ந்து அவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது. அதிலும், சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பைத் தொடரில் சஞ்சு சாம்சன் அணியில் இல்லாமல் போனது பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்திருந்தது. மேலும் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரிலும் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் தான், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சஞ்சு சாம்சனை அணியில் இணைத்துள்ளது. அவருக்கான வாய்ப்புகள் சரியாக கிடைத்தால், நிச்சயம் தொடர்ந்து அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்