இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த மிடில் ஆர்டர் வீரராக இருந்து வருபவர் தான் சஞ்சு சாம்சன். ஐபிஎல் உள்ளிட்ட பல முக்கியமான தொடர்களில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போதிலும் ஒரு முறை கூட உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தார். இவரை விட சுமாராகவே விடும் வீரர்களுக்கு அணியில் இடம் கிடைத்த போதிலும் சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்பு கிடைக்காமல் போனது கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில் கவனம் பெற்று பேசு பொருளாக மாறி இருந்தது.
அப்படி ஒரு சூழலில் இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் கேப்டனாக ஜொலித்திருந்த சஞ்சு சாம்சன், பேட்டிங்கிலும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி தற்போது உலகக் கோப்பை அணியிலும் இடம்பிடித்திருந்தார். ஒரு வாய்ப்பு கூட கிடைக்காமல் இருந்தாலும் உலக கோப்பை அணியில் அவர் இடம் பிடித்திருந்ததே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படும் நிலையில் தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடரிலும் கடைசி போட்டியில் அரைச்சதம் அடித்து அசத்தியிருந்தார்.
இந்த போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர்கள் ரன் சேர்க்காமல் அவுட்டாக, நான்காவது வீரராக உள்ளே வந்த சஞ்சு சாம்சன் நிதானமாக ரன் சேர்த்து 58 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். இதனால் இந்திய அணியும் 167 ரன்கள் சேர்க்க தொடர்ந்து ஆடி இருந்து ஜிம்பாப்வே அணி, 125 ரன்களில் ஆல் அவுட் ஆகி இருந்தது.
ஏற்கனவே தொடரை வென்றிருந்த இந்திய அணி கடைசி போட்டியிலும் வெற்றியுடன் முடித்து இருந்த நிலையில் சஞ்சு சாம்சன் செய்த முக்கியமான சாதனையை பற்றி தற்போது பார்க்கலாம். இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அரைச் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையும் சஞ்சு சாம்சன் தற்போது பெற்றுள்ளார்.
அதே போல தனது பத்தாவது டி20 சர்வதேச போட்டியில் முதல் அரைச்சதம் அடித்துள்ள சஞ்சு சாம்சன், தோனியின் ஒரு முக்கியமான சாதனையும் மிஞ்சி உள்ளார். இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே எல் ராகுல் தனது முதல் டி20 சர்வதேச இன்னிங்சிலும், இஷான் கிஷன் 3 வது இன்னிங்சிலும், ரிஷப் பந்த் 5வது இன்னிங்சிலும் முதல் அரைசதத்தை அடித்துள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக 10 வது இன்னிங்சில் முதல் அரைச் சதத்தை அடித்துள்ள சஞ்சு சாம்சன், தோனியை முந்தி உள்ளார். ஒரு விக்கெட் கீப்பராக தனது முதல் டி 20 அரை சதத்தை எட்ட 66 இன்னிங்ஸ்களை தோனி எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.