- Advertisement 3-
Homeவிளையாட்டுசிஎஸ்கே அணிக்கு வரப் போறாரா சஞ்சு சாம்சன்? அஸ்வினுக்கு நெருக்கமான பிரபல கிரிக்கெட் ஆய்வாளர் சொன்ன...

சிஎஸ்கே அணிக்கு வரப் போறாரா சஞ்சு சாம்சன்? அஸ்வினுக்கு நெருக்கமான பிரபல கிரிக்கெட் ஆய்வாளர் சொன்ன பரபரப்பு தகவல் – வருத்தத்தில் RR ரசிகர்கள்

- Advertisement 1-

நடந்து முடித்த ஐபிஎல்-இல் ஒரு வழியாக சிஎஸ்கே கோப்பையை 5வது முறையாக வென்றுள்ளது. அதே சமயம் வெற்றி பெற்ற பிறகு பேசிய தோனி, தன்னுடைய உடல்நிலை ஒத்துழைத்தால், தன் ரசிகர்களின் அன்பிற்காக தான் இன்னும் ஒரு சீசன் விளையாட போவதாக கூறி உள்ளார். ஆனால் அவர் அடுத்த சீசன் நிச்சயம் விளையாடுவாரா என்பதெல்லாம் தற்போது வரை தெரியாது.

இந்த நிலையில், ஒருவேளை தோனி அடுத்த சீசன் விளையாடவில்லை என்றால், சிஎஸ்கே அணியை வழிநடத்தப்போவது யார்?, கீப்பர் யார் போன்ற கேள்விகள் சிஎஸ்கே ரசிகர்களின் மனதில் எழ துவங்கி உள்ளது. அதே சமயம் இது போன்ற சூழலை எதிர்கொள்ள சென்னை அணியின் நிர்வாகமும் பல ஏற்பாடுகளை செய்ய நிச்சயம் வாய்ப்புகள் உண்டு.

இந்த நிலையில், பிரபல கிரிக்கெட் ஆய்வாளரான பிரசன்னா அகோரம் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் சென்னை அணி எப்படி யோசிக்கும் என்பதை கூறி உள்ளார். அவர் கூறுகையில், தோனிக்கு மாற்று வீரராக சிஎஸ்கே நிர்வாகம் ஒரு விக்கெட் கீப்பரை ஏலத்தில் எடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனாக இருக்கக்கூடும் என்று பல தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்கு தெரியவில்லை. தோனி அணியில் இருந்தால் சிஎஸ்கே எதை பற்றியும் கவலை படாது. அவர் வந்து நின்றாலே சிஎஸ்கே வென்று விடும்.

- Advertisement 2-

ஆனால் ஒருவேளை அவர் அடுத்த சீசன் விளையாடவில்லை என்றால் அஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியில் இணைந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். சிறப்பான ஒரு பேட்டிங் லைன்அப் இருக்கும் அந்த அணியில் சஞ்சு சாம்சன் சென்று, பென் ஸ்டோக்ஸும் அணிக்குள் வந்துவிட்டால் நிச்சயம் கோப்பையை வெல்லுவார்கள்.

தோனி இல்லாத பட்சத்தில் சாதாரண ஒரு விக்கெட் கீப்பர் சிஎஸ்கே வில் இருப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை. சஞ்சு சாம்சன் போன்று இம்பாக்ட் கிரியேட் செய்கிற ஒரு விக்கெட் கீப்பர் அந்த அணியில் இருப்பது அவசியம் என்று அவர் தெரிவித்துளளார். பிரசன்னாவின் இந்த வீடீயோவை பார்த்த RR ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். அதே வேலையில் RR-ருக்கும் சஞ்சுவுக்கும் இடையே உள்ள பிணைப்பை யாராலும் அசைக்க முடியாது. அவர் அதே அணியில் தான் இருப்பார் என்று கூறுகின்ற.

சற்று முன்