- Advertisement -
Homeவிளையாட்டுசிம்பிள் ரன் அவுட்டை கோட்டை விட்ட சஞ்சு சாம்சன். இணையத்தில் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

சிம்பிள் ரன் அவுட்டை கோட்டை விட்ட சஞ்சு சாம்சன். இணையத்தில் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

- Advertisement-

ஐபிஎல் 16 ஆவது சீசனின் 52 ஆவது போட்டியில் நேற்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி, 59 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். மற்றொரு வீரரான சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்தார். இந்த அதிரடியான இன்னிங்ஸ்களால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட்களை இழந்து 214 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் அதிரடியாக விளையாடி, ரன்களைக் குவித்து இலக்கை நோக்கி சென்றது. ஆனாலும் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தவண்ணம் இருந்ததால், ராஜஸ்தான் கை ஓங்கி இருந்தது. ஒரு கட்டத்தில் ரன் ரேட் அதிகமாகிக் கொண்டே சென்ற நிலையில் சன் ரைசர்ஸ் அணியின் க்ளன் பிலிப்ஸ் சர்பரைஸாக ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி நம்பிக்கையை ஊட்டினார். ஆனால் அதே ஓவரில் அவர் அடுத்த பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் 7 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார்.

- Advertisement -

இதையடுத்து கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற பொழுது, சந்தீப் சர்மாவின் கடைசி பந்து நோபால் உதவியுடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வென்றது. இந்த போட்டியில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் சொதப்பல்களும் முக்கியக் காரணியாக அமைந்தது. அதில் மிகவும் மோசமாக அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனே எளிதான ஒரு ரன் அவுட்டை கோட்டைவிட்டது சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

ஐதராபாத் அணி வீரர் அபிஷேக் சர்மா, 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்த போது முருகன் அஷ்வின் பந்தில் கட் ஷாட் ஆடி ஒரு ரன் எடுக்க முயன்றார். அந்த பந்தை லாவகமாக பிடித்த ஹெட்மெய்ர் ரன் அவுட்டுக்காக பந்தை கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு மின்னல் வேகத்தில் த்ரோ செய்தார். ஆனால் பந்து வருவதற்கு முன்பே சாம்சன் ஸ்டம்ப்பை தட்டிவிட்டார். இதனால் பைல்ஸ் கீழே விழுந்தது. பின்னர் பந்தையும் பிடிக்காமல் வெறும் க்ளவுஸால் ஸ்டம்புகளை மறுபடியும் தட்டினார். அப்போது வரை பேட்ஸ்மேன் க்ரீஸை தொடவில்லை. இதன்மூலமாக மிக எளிதான ரன் அவுட்டை சஞ்சு சாம்சன் கோட்டை விட, ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சமூகவலைதளங்களில் சாம்சனைக் கண்டபடி விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

- Advertisement-

சற்று முன்