நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. அதை சமாளிக்க முடியாமல் திணறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மொத்தமாக 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 13.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 119 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர்ப்ளே ஓவர்களில் சிறப்பாகவே இன்னிங்ஸை தொடங்கியது. முதல் 5 ஓவர்களில் 1 விக்கெட் இழந்து 47 ரன்கள் சேர்த்திருந்தது. ஆனால் 6 ஆவது ஓவருக்குப் பிறகுதான் ரன் ரேட்டும் குறைய ஆரம்பித்து, விக்கெட்களும் விழ ஆரம்பித்தன. பவர்பிளேயில் இருந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்திருந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது உச்சகட்ட பார்மில் இந்த சீசனில் இருக்கிறார். நேற்றைய போட்டியில் அவரின் சரளமான ஸ்ட்ரோக்பிளேயைக் கருத்தில் கொண்டு மற்றொரு பெரிய இன்னிங்ஸை அவர் விளையாடியிருக்கலாம். இருப்பினும், ஒரு துரித ரன்னுக்காக விக்கெட்டுகளுக்கு இடையே ஓடும்போது சஞ்சு சாம்சனின் தவறு காரணமாக அவர் ரன் அவுட் ஆகவேண்டிய பரிதாப சூழல் உருவானது.
ரஷித் கான் இன்னிங்ஸின் ஆறாவது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஸ்டிரைக்கில் இருந்த சஞ்சு சாம்சனுக்கு ஆஃப் சைடுக்கு வெளியே ஒரு வேகமான பந்தை வீசினார். அதை பாய்ண்ட்டுக்கு இடையில் ஒரு கட் ஷாட் விளையாடினார் சஞ்சு சாம்சன். அந்த பந்தை அபினவ் மனோகர் பந்தை நிறுத்த டைவ் செய்து நிறுத்தினார்.
இந்த ஷாட்டுக்காக இரண்டு பேட்டர்களும் ஆரம்பத்தில் ஒரு ரன் எடுக்கத் தொடங்கினர். ஆனால் அபினவ்வின் பீல்டிங் முயற்சியைப் பார்த்த பிறகு சாம்சன் மீண்டும் கிரீஸுக்கு சென்றுவிட்டார். ஆனால் அதற்குள் ஜெய்ஸ்வால் பெரும்பகுதி தூரத்தைக் கடந்துவிட்டார். மனோகருக்கு அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த மோகித் சர்மா பந்தை எடுத்து ரஷித் கானிடம் வீசினார்.
How to dismiss man-in-form Yashasvi Jaiswal? 🥵👀
Gujarat Titans:pic.twitter.com/ksyDV2k3kX
— Cricket.com (@weRcricket) May 5, 2023
ஜெய்ஸ்வால் கிட்டத்தட்ட மறுமுனையை நெருங்கியதால், இதனால் ஜெய்ஸ்வால் திரும்பி ஆடாமுனைக்கு விரைவாக ஓட முடியாத சூழலில், பந்தை பிடித்த ரஷித் கான் ரன் அவுட் செய்து ஜெய்ஸ்வாலை அவுட்டாக்கினார். சிறப்பால சென்று கொண்டிருந்த ராஜஸ்தான் இன்னிங்ஸ்க்கு ஒரு திருப்பு முனையாக ஜெய்ஸ்வால் விக்கெட் அமைந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.