- Advertisement -
Homeவிளையாட்டுசிஎஸ்கே ஸ்மார்ட்டா செஞ்ச விஷயம்.. நான் அதுல தப்புக்கணக்கு போட்டுட்டேன் - உண்மையை உடைத்த சஞ்சு..

சிஎஸ்கே ஸ்மார்ட்டா செஞ்ச விஷயம்.. நான் அதுல தப்புக்கணக்கு போட்டுட்டேன் – உண்மையை உடைத்த சஞ்சு..

- Advertisement-

முதல் ஒன்பது போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று கம்பீரமாக திகழ்ந்த ராஜஸ்தான் அணி விரைவில் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்து விடும் என்று தான் அனைவருமே கருதினர். ஆனால் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்திருந்த ராஜஸ்தான் அணி, பிளே ஆப் முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியானாலும் அதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யாமல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது.

அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்த கொல்கத்தா அணி, மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சமீபத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக பிளே ஆப் முன்னேறி இருந்தது. எப்படியாவது பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்து விட வேண்டும் என்ற முனைப்பில் தங்களின் 12 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டிருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 141 ரன்கள் எடுக்க பின்னர் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி, ஆரம்பத்தில் அதிரடி காட்டினாலும் பின்னர் நிதானமாக ஆடி ரன் சேர்த்தது. இதனால், போட்டியும் ஒரு கட்டத்திற்கு பிறகு இரண்டு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு என்பது போல செல்ல, சென்னை அணிக்கும் சிறிய இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது.

ஆனாலும், இறுதி கட்டத்தில் சமீர் ரிஸ்வி மற்றும் ருத்துராஜ் இணைந்து நிதானமாக ரன் சேர்த்ததால், 19 வது ஓவரில் பத்து பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றதுடன் பிளே ஆப் வாய்ப்பையும் தக்க வைத்து 3 வது இடத்திற்கு முன்னேறி இருந்தது. மேலும், ஆர்சிபிக்கு எதிராக தங்களின் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் வாய்ப்பையும் உறுதி செய்து விடலாம்.

- Advertisement-

இந்த தோல்விக்கு பின் பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், “முதல் சில ஓவர்கள் பேட்டிங் செய்து முடித்ததும் பிட்ச் மிக ஸ்லோவாக இருந்தது என்பதை உணர்ந்து கொண்டேன். பவுன்சும் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. நான் மிடில் ஓவர்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 170 ரன்கள் வரை சேர்க்க முடியும் என நினைத்திருந்தேன்.

ஆனால், 20 முதல் 25 ரன்கள் வரை குறைவாக இருந்தது. நாங்கள் முடிந்தவரை முயற்சி செய்தாலும் சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் இங்குள்ள சூழல் அறிந்து ஸ்மார்ட்டாக செயல்பட்டனர். எதிரணியின் மைதானங்களில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதே தெரியவில்லை. சிமர்ஜீத் சிங் நன்றாக பந்து வீசினார். சேப்பாக் மைதானத்தை பார்த்த போது முதலில் பேட்டிங் செய்வது தான் சரியாக இருக்கும் என தோன்றியது.

நீங்கள் 2 வது பந்து வீசும் போது, சிஎஸ்கேவிடம் அதை சேஸ் செய்ய சிறந்த ஐடியா கையில் இருக்கும் என்றே நினைக்கிறேன். 2 வது இன்னிங்சிலும் மெதுவாக தான் பிட்ச் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், பேட்டிங் செய்ய அங்கே நன்றாக இருந்தது. இந்தியாவில் வெப்பம் அதிகமாக இருப்பதால் 2 வது இன்னிங்சில் ரன் அடிப்பது கடினமாக இருக்கும் என நினைத்தேன்.

இந்த மாதிரி நேரத்தில் பிளே ஆப் தகுதி பற்றி சிந்திப்பது சாதாரணமான விஷயம் தான். எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களில் தான் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் அணி வீரர்களிடமும் இதே செயல்முறையில் தொடர்ந்து கவனம் செலுத்தி அடுத்த முறை வெற்றி பெற வேண்டும் என்பதை தான் கூறி கொள்கிறேன்” என சஞ்சு சாம்சன் கூறினார்.

சற்று முன்