- Advertisement 3-
Homeவிளையாட்டுஅந்த பக்கமே 3 மாசம் போகல.. சஞ்சு சாம்சனுக்கு டி 20 உலக கோப்பையில் வாய்ப்பு...

அந்த பக்கமே 3 மாசம் போகல.. சஞ்சு சாம்சனுக்கு டி 20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைத்த ரகசியம் இதான்..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பைக்காக தற்போது அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இதில் சில வீரர்கள் இடம் பிடித்திருந்தது மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தையும், ஏக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் சஞ்சு சாம்சன், கடந்த பல ஆண்டுகளாக மிகச் சிறந்த ஆட்டத்தை தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஆடி வந்தாலும் உலக கோப்பை தொடர்களில் இந்திய அணிக்காக தேர்வாகாமலேயே இருந்து வந்தார்.

கடந்த ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பையில் கூட சாம்சன் பெயர் இல்லாதது அதிக அளவில் விமர்சனத்தை சந்தித்திருந்தது. அப்படி இருக்கையில் இந்த முறை நிச்சயம் டி 20 உலக கோப்பை அணியில் இடம்பெற்று விடுவார் என்று தான் எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் அதே வேளையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் சஞ்சு சாம்சன் இருப்பதால் அதற்கான போட்டியும் கடுமையாக இருந்தது.

ரிஷப் பந்த் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் ஆட தொடங்கிவிட்ட நிலையில், அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது விக்கெட் கீப்பர் ஆப்ஷனாக சஞ்சு சாம்சன், கே எல் ராகுல், ஜிதேஷ் சர்மா உள்ளிட்ட பலருக்கு மத்தியில் போட்டி அதிகமாக இருந்தது. இதனால் சஞ்சு சாமசனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக ஆடி இருந்த சாம்சன், இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட சமயத்தில், 9 போட்டிகளில் 385 ரன்கள் எடுத்து அதிக ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்திருந்தார்.

இதனால் ராகுலுக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக வாய்ப்பு கிடைத்திருந்தது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை அணியில் தேர்வானது பற்றி பேசி இருந்த சஞ்சு சாம்சன், “அந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் எமோஷனலான தருணமாக இருந்தது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அப்படி ஒரு வாய்ப்பே கிடைக்காது என்று தான் எதிர்பார்த்திருந்தேன். ஏனென்றால் தேர்வு செய்யப்படுவதெல்லாம் வீரராக நான் இல்லை என்பதால் ஐபிஎல் தொடரில் ஏதாவது ஸ்பெஷலாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

- Advertisement 2-

அதற்காக நான் மிக முக்கியமான ஒரு விஷயத்தை தீர்மானம் எடுத்திருந்தேன். இதற்காக எனது ஃபோனை ஒட்டுமொத்தமாக கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்கள் என் போனை ஆஃப் செய்து வைத்தேன். போட்டியில் மட்டும்தான் முழு கவனமும் செலுத்த வேண்டும் என்றும் நினைத்திருந்தேன்.

இதன் பின்னர் என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்தி எப்படியாவது உலக கோப்பை அணியில் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி அணிக்காக போட்டியும் வென்று கொடுத்ததால் எனக்கான வாய்ப்பும் கிடைத்திருந்தது. உலகின் சிறந்த டி 20 அணியில் அதுவும் உலக கோப்பையில் இடம் கிடைப்பது நிச்சயம் ஒரு ஸ்பெஷலான விஷயம் தான்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்