- Advertisement 3-
Homeவிளையாட்டுஆர்சிபியின் கதையை முடிக்க.. சங்கக்காரா போட்ட பிளான்.. நம்ம பசங்க மாஸ் பண்ண ரகசியம்.. சஞ்சு...

ஆர்சிபியின் கதையை முடிக்க.. சங்கக்காரா போட்ட பிளான்.. நம்ம பசங்க மாஸ் பண்ண ரகசியம்.. சஞ்சு சாம்சன் வெளிப்படை..

- Advertisement 1-

இந்த சீசனில் முதல் அணியாக பிளே ஆப் முன்னேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அணி தான் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ். முதல் 9 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்திருந்த ராஜஸ்தான் அணி, கடைசியாக ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்திருந்தது.

முதல் பாதியில் ஃபார்மில் இருந்த வீரர்கள் இரண்டாவது பாதியில் சொதப்பியதால் அவர்களால் மீண்டும் ஒருமுறை வெற்றியை ருசிக்க முடியாமல் போனதுடன் மட்டுமில்லாமல் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தனர்.

மேலும் குவாலிஃபயர் 1 போட்டியில் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் அணி, எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்தித்திருந்தது. தொடர்ச்சியாக ஆறு வெற்றிகளை குவித்து பலமாக திகழ்ந்த ஆர்சிபி அணியை எதிர்கொள்வது ராஜஸ்தானுக்கு சிரமமாக இருக்கும் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி மாஸாக கம்பேக் கொடுத்திருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 172 ரன்களில் ஆர்சிபியை கட்டுப்படுத்திய அவர்கள், இலக்கையும் 19 வது ஓவரில் எட்டி இருந்தனர். கடந்த போட்டியில் சிஎஸ்கேவுக்கு எதிராக ஆட்டம் போட்ட ஆர்சிபி வீரர்கள், இந்த முறை ஃபீல்டிங்கில் ஆக்ரோஷம் இல்லாமல் அமைதியாய் அடங்கி போயினர்.

- Advertisement 2-

பந்து வீச்சில் சிறப்பாக ராஜஸ்தான் செயல்பட்டாலும், பேட்டிங்கில் அவர்கள் சிறிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டிருந்தது. ஆனாலும் ரியான் பராக் மற்றும் ஹெட்மயர் உள்ளிட்டோர் நல்ல பங்களிப்பை அளித்ததால் ஒரு ஓவர் மீதம் வைத்து வெற்றி இலக்கையும் எட்டி இருந்தனர்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என நினைத்த ஆர்சிபி அணியை ஒரே ஒரு போட்டியுடன் பிளே ஆப் சுற்றிற்கு வெளியே அனுப்பிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், இந்த வெற்றிக்கு பின் பேசுகையில், “கிரிக்கெட் மற்றும் வாழ்க்கை என இரண்டுமே நிறைய நல்ல விஷயங்களும், கெட்ட விஷயங்களும் இருக்கும் என்பதை கற்றுத் தருகிறது. ஆர்சிபி அணிக்கு எதிராக எங்களின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்தையும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்களின் பந்து வீச்சாளர்கள் எப்போதுமே எதிரணியின் பேட்ஸ்மேன்கள் எப்படி ஆடுவார்கள் என்பதை பொறுத்து பீல்டிங் அமைத்து வருகிறார்கள். இதனால் எங்களின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா மற்றும் பவுலின் பயிற்சியாளர் பாண்டிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் இருவருமே அணி வீரர்களுடன் இதுபோன்ற பல விஷயங்களை தொடர்ந்து உரையாடி கொண்டு வருகின்றனர்.

மேலும் அஸ்வின் மற்றும் போல்ட் ஆகியோரும் அனுபவமான பந்து வீச்சாளர்கள். ரியான் பராக் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவருமே 22 வயதானவர்கள். அதே போல தான் துருவ் ஜூரேலும். இப்படி குறைந்த அனுபவம் கொண்டு இந்த நேரத்தில் அவர்களின் ஆட்டம், அற்புதமாக உள்ளது. போவெல் கடைசி கட்டத்தில் சிறப்பாக போட்டியை முடித்து வைத்தார்” என சஞ்சு சாம்சன் கூறினார்.

சற்று முன்