- Advertisement 3-
Homeவிளையாட்டுஅதை மட்டும் கேட்காதீங்க.. பேட்டிங் செஞ்சப்போ அப்படி நான் நெனைச்சதே தப்பு.. கலங்கிப் போன சஞ்சு...

அதை மட்டும் கேட்காதீங்க.. பேட்டிங் செஞ்சப்போ அப்படி நான் நெனைச்சதே தப்பு.. கலங்கிப் போன சஞ்சு சாம்சன்..

- Advertisement 1-

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கடந்த சில சீசன்களாகவே பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தாலும் ஏதோ ஒரு பிரச்சனையினால் அவர்களால் கோப்பையை கைப்பற்ற முடியாத நிலையும் இருந்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதி போட்டி வரை முன்னேறி இருந்த ராஜஸ்தான், குஜராத் அணிக்கு எதிராக தோல்வியை தழுவி, கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டிருந்தது.

தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு கடைசிகட்ட லீக் போட்டிகளில் சில தொடர் தோல்விகளால் அவர்கள் ப்ளே ஆஃப் முன்னேறும் வாய்ப்பையும் இழந்திருந்தனர். அப்படி ஒரு சூழலில் தான் இந்த முறை அதைவிட அதிக பலத்துடன் அவர்கள் திரும்பி வந்துள்ளார்கள் என்றே சொல்லலாம். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசுர பலத்துடன் விளங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதல் நான்கு போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி கண்டிருந்தது.

அப்படி ஒரு சூழலில், குஜராத் அணிக்கு எதிராக ஆடியிருந்தனர். இந்த சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால் மீண்டும் ஒருமுறை ராஜஸ்தான் அணிக்காக பேட்டிங்கில் சொதப்பி இருந்தார். அவரைப் போலவே பட்லரும் சொற்ப ரன்களில் அவுட்டாக சாம்சன் மற்றும் ரியன் பராக் ஆகியோர் இணைந்து ராஜஸ்தான் அணியின் ரன் ரேட்டையே மாற்றி காட்டினார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அவர்கள் 196 ரன்கள் குவிக்க சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஆகிய இருவருமே 60 ரன்களைக் கடந்து பட்டையை கிளப்பியிருந்தனர். குஜராத் அணியில் பவுலிங்கில் சொதப்ப ராஜஸ்தான் அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இந்த தொடரில் தொடர்ந்து தடுமாற்றங்களை கண்டு வரும் குஜராத் அணி 197 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சூழலில், ஆரம்பத்தில் வெற்றி பெறுவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

- Advertisement 2-

கடைசி 6 ஓவர்களில் அவர்கள் வெற்றிக்கு 86 ரன்கள் தேவைப்பட, இறுதி ஓவர்களில் ரஷீத் கான் மற்றும் ராகுல் தெவாட்டியா சிறப்பாக செயல்பட்டு கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற செய்தனர். இந்த தொடரில் முதல் தோல்வியை அடைந்த பின் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசுகையில், “போட்டியின் கடைசி பந்தில் தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என நினைக்கிறேன். அது பற்றி தற்போது பேசுவதே கடினமாக உள்ளது.

ஒரு போட்டி தோல்வி அடையும் போது எங்கே தோற்றோம் என சொல்வது தான் ஒரு தொடரில் கேப்டனுக்கு கடினமான விஷயம். இந்த எமோஷன் குறையும் போது அதில் ஒரு தெளிவு கிடைக்கும். இது தான் ஐபிஎல் தொடரின் அழகு. இதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டு கடந்து செல்ல வேண்டும். நான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 180 என்பது நல்ல ஸ்கோர் என நினைத்தேன்.

196 ரன்கள் என்பது நிச்சயம் வெற்றி பெற்றிருக்க வேண்டிய இலக்கு. டியூ இல்லாததால் பந்து வீச்சாளர்கள் நிச்சயமாக அதை செய்திருக்க வேண்டும்” என சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

சற்று முன்