- Advertisement 3-
Homeவிளையாட்டுபும்ராவுக்கு அடுத்த பவுலர் அவரு.. ஃபைனல்ஸ்ல ஹைதராபாத் இத பண்ணுவாங்க.. சஞ்சு சாம்சன் உறுதி..

பும்ராவுக்கு அடுத்த பவுலர் அவரு.. ஃபைனல்ஸ்ல ஹைதராபாத் இத பண்ணுவாங்க.. சஞ்சு சாம்சன் உறுதி..

- Advertisement 1-

மிக கம்பீரமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத்தையும் அதே வேகத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறுவார்கள் என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அடைந்துள்ள தோல்வி அனைவரையுமே ஒரு நிமிடம் மனம் உடைய வைத்துள்ளது.

இந்த சீசனில் நல்ல ஒரு கேப்டனாக விளங்கி இருந்தவர் தான் சஞ்சு சாம்சன். எதிரணியில் பேட்டிங் வரும் வீரருக்கு ஏற்ப பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங்கை சிறப்பாக செய்து விக்கெட்டுகளை வீழ்த்துவதில் முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சன், ஹைதராபாத்திற்கு எதிராக டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தார்.

அதன்படி ஆடிய ஹைதராபாத் அணி, அவ்வப்போது சில விக்கெட்டுகளை இழந்தாலும் கிளாஸன் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் அதிரடியாக ஆடி அந்த அணி 175 ரன்கள் எடுக்க காரணமாக இருந்தனர். சேப்பாக்கத்தில் 175 ரன்கள் என்பது நல்ல ஸ்கோராக இருந்த நிலையில் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி அதிரடியாக பேட்டிங்கை தொடங்கி இருந்தது.

ஜெய்ஸ்வால் ஒரு பக்கம் அதிரடி காட்ட, மறுபுறம் டாம் கோஹ்லர் ரன் எடுக்கவே சிரமப்பட்டார். அவர் பத்து ரன்களில் அவுட்டாக பின்னர் வந்த சஞ்சு சாம்சனும் அதே 10 ரன்களில் நடையைக் கட்டி ஏமாற்றம் அளித்தார். இதனால், ராஜஸ்தானுக்கு நெருக்கடி உருவாக, இந்த சீசனில் நன்றாக பேட்டிங் செய்து பல போட்டிகளில் ராஜஸ்தான் கரையேற்றிய ரியான் பராக் என யாருமே இந்த முறை ரன் சேர்க்க தடுமாறியதால் ராஜஸ்தான் அணியின் தோல்வியும் ஏறக்குறைய உறுதியாகி வந்தது.

- Advertisement 2-

ஜூரேல் மட்டும் 50 ரன்களை எட்ட, 20 ஓவர்களில் 138 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் எடுக்க, 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஹைதராபாத். இதனால் மீண்டும் கொல்கத்தா அணியை இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் சந்திக்க உள்ளனர்.

இந்த தோல்விக்கு பின் பேசியிருந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், “எங்களின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது உண்மையாக பெருமையாக இருந்தது. ஆனால் அவர்களின் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக மிடில் ஓவர்களில் விக்கெட்டை பறிகொடுத்ததால் தான் நாங்கள் தோல்வி அடைந்தோம். பனி எப்போது வரும், எப்போது வராது என்பதை கணிப்பதற்கே மிகவும் கடினமாக உள்ளது. இரண்டாவது இன்னிங்சில் பந்து அதிகமாக திரும்பி இருந்ததை மிக சாதகமாக ஹைதராபாத் அணி பயன்படுத்திக் கொண்டது.

எங்களின் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு அவரது சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்தை வீசியிருந்தனர். கடந்த மூன்று சீசன்களாக நிறைய அற்புதமான போட்டிகளில் ஆடி வருகிறோம். ரியான் பராக், ஜூரேல் என இந்திய அணிக்காக நிறைய இளம் வீரர்களையும் நாங்கள் உருவாக்கி உள்ளோம். ஏலத்தில் அணிக்கு தேர்வாகாமல் மாற்றுவீரராக உள்ளே வந்து இந்த அளவுக்கு பந்து வீசிய சந்திப் ஷர்மாவையும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். பும்ராவுக்கு அடுத்த சிறந்த பந்து வீச்சாளராகவும் அவர் தற்போது உள்ளார்.

இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் என இரண்டு அணிக்கும் சூழல் நன்றாக இருக்கிறது. இதனால், ஹைதராபாத் நிச்சயம் பவர் பிளேவில் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன். ஒரு பக்கம் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி வர, இன்னொரு பக்கம் கொல்கத்தா அணி அதிக தன்னம்பிக்கை கொண்டும் இருப்பதால் இறுதிப் போட்டி மிக சுவாரஸ்யமாக இருக்கும்” என சஞ்சு சாம்சன் கூறினார்.

சற்று முன்