கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் பலம் வாய்ந்த அணிந்த அணியாக ராஜஸ்தான் அணி இருந்த போதிலும் அவர்களால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. 2022 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இறுதிக் போட்டிக்கு முன்னேறி இருந்த போதிலும் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்திருந்தது. தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நல்ல அணியாக இருந்தும் அவர்களால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை கடைசி கட்டத்தில் சில போட்டிகளில் தோற்றதன் மூலம் இழந்திருந்தன.
அப்படி இருக்கையில் இந்த முறை நிச்சயமாக அவர்கள் இறுதி போட்டிக்கு முன்னேறி கோப்பையை தட்டி தூக்குவார்கள் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கும் நிலையில் அப்படி ஒரு ஆட்டத்தை தான் ஒரு அணியாக அவர்கள் இந்த சீசனில் ஆடி வருகின்றனர். சஞ்சு சாம்சன் தலைமையில் ஆடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இதற்கு முன்பாக ஆடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி கண்டிருந்த அவர்கள் தற்போது மூன்றாவது வெற்றியையும் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளனர். இந்த மூன்று போட்டிகளிலும் ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கில் தொடக்க ஜோடி சிறப்பாக ஆடவில்லை என்றாலும் அதன் பின்னால் வரும் வீரர்கள் நன்றாக ஆடி ரன் சேர்த்து அணியின் வெற்றி பாதைக்கும் அழைத்துச் செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக இளம் வீரர் ரியான் பராக் தொடர்ந்து மூன்று போட்டிகளில் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்த போட்டியில் அவர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்து இருந்தார். மறுபக்கம் மும்பை அணிக்கு மூன்றாவது தோல்வியாக மாறி உள்ள நிலையில் இந்த தொடரில் சொந்த மைதானத்தில் தோற்ற இரண்டாவது அணியாகவும் அவர்கள் மாறி உள்ளனர்.
மூன்றாவது வெற்றியுடன் முதலிடத்திற்கு முன்னேறி உள்ள உற்சாகத்துடன் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் டாஸ் தான் இந்த போட்டியின் கேம் சேஞ்சர். இங்கே போட்டியை ஆரம்பிக்க கடினமாக இருந்தது. அதே போல போல்ட்டின் அனுபவம் எங்களுக்கு உதவி செய்தது. அவர் 10 முதல் 15 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வருகிறார். அந்த அனுபவத்தை தான் நாங்கள் புதிய பந்தில் எதிர்பார்த்தோம். 4 முதல் 5 விக்கெட்டுகள் விழும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் எங்களின் பந்து வீச்சாளர்கள் பற்றி எங்களுக்கு தெரியும்.
அணியில் தனித்தனியாக நிறைய திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தாலும் தங்களின் வேலை என்ன என்பதை அறிந்து அனைவருமே சிறப்பாக செயல்படுகின்றனர். அஸ்வின் மற்றும் சாஹல் ஆகியோர் நல்ல பவர் பிளே ஓவர்கள் ஆரம்பித்ததை உணர்ந்து பின்னர் விக்கெட்டுகளை எடுக்கும் முயற்சியில் பந்து வீசி இருந்தனர். அதிலும் சாஹல் இந்த ஐபிஎல் தொடரில் நெருப்பாக இருக்கிறார். அவர் எங்களுக்காகவும் கடந்த சில சீசன்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்” என சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.