- Advertisement 3-
Homeவிளையாட்டுஅதை நெனச்சா சிரிப்பா இருக்கு.. மேட்ச்ல தப்பு செஞ்சும் ஜெயிச்சோம்.. சஞ்சு சாம்சன் வெளிப்படை..

அதை நெனச்சா சிரிப்பா இருக்கு.. மேட்ச்ல தப்பு செஞ்சும் ஜெயிச்சோம்.. சஞ்சு சாம்சன் வெளிப்படை..

- Advertisement 1-

நடப்பு ஐபிஎல் தொடரில் மற்ற அனைத்து அணிகளை விட முன்னிலையில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இன்னும் இரண்டு முதல் மூன்று போட்டிகளில் வென்று விட்டாலே ஏறக்குறைய பிளே ஆப் சுற்றை உறுதி செய்துவிடலாம். முதல் ஐபிஎல் தொடரில் கோப்பை கைப்பற்றிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அதன் பிறகு இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது கிடையாது.

அப்படி இருக்கையில், இந்த முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவும் கருதப்பட்டு வருவதால் நிச்சயம் இந்த முறை ராஜஸ்தான் அணியின் தாக்கம் பெரிதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பஞ்சாப் கிங்ஸ் அணியை சமீபத்திய போட்டியில் ராஜஸ்தான் எதிர்கொண்டிருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 147 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும் அதனை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி ரன் அடிக்க முடியாமல் கடுமையாக சிரமப்பட்டனர்.

கடைசி ஓவரில் ஹெட்மயர் உதவியுடன் தான் அவர்கள் இலக்கையும் எட்டி இருந்தனர். இது அவர்களின் ஐந்தாவது வெற்றியாகவும் மாறி உள்ள நிலையில் புள்ளிப்பட்டியிலில் கம்பீரமாக முதலிடத்தில் இருந்து வருகின்றனர். இந்த வெற்றிக்கு பின் பேசியிருந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், “நிறைய பெரிய கேட்சுகள் எங்களுக்கு சமீபத்திய சீசன்களில் அமைந்துள்ளது வேடிக்கையாகவே உள்ளது. ஆனால் அணியில் உள்ள அனைவருமே ஆர்வமாக சென்று கேட்சை பிடிக்க நினைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் அப்படி செய்யாமல் இருந்திருந்தால் தான் நான் மனமுடைந்திருப்பேன்.

மைதானம் முழுக்க சத்தம் அதிகம் இருப்பதால் கேட்ச் எடுக்க வரும் நபர் சத்தம் போட்டாலும் அது யார் வருகிறார் என்பது சரியாக தெரியவில்லை. நான் எனது வேகப்பந்து வீச்சாளர்களிடம் ஒன்றை மட்டும் தான் சொல்லிக் கொள்கிறேன், க்ளவுசில் கேட்ச் எடுப்பது தான் எளிதான விஷயம். நாங்கள் இலக்கை நோக்கி ஆடிய போது மிகவும் பதட்டம் அடைந்தேன். பஞ்சாப்புக்கு எதிராக கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகள் நடந்த ஒவ்வொரு போட்டியும் மிக நெருக்கமாக சென்று தான் முடிந்திருந்தது.

- Advertisement 2-

பஞ்சாப் அணி வீரர்களும் நன்றாக பந்து வீசியிருந்தனர். ஹெட்மயர் எங்கள் அணிக்காக கடந்த சில ஆண்டுகளாய் சிறப்பாக ஆடி வருகிறார். அவரது அனுபவம் மற்றும் தன்னம்பிக்கை காரணமாக எங்களுக்காக போட்டியும் வென்று கொடுக்கிறார். அதேபோல ஜெய்ஸ்வால் மிடில் ஓவர்களில் ஆடி 30 முதல் 40 ரன்கள் அடித்ததும் மகிழ்ச்சியாக உள்ளது. வெற்றிகள் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்வது என்பதை தான் 10 வருடங்களில் ஐபிஎல் தொடர் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

கடந்த போட்டியில் சிறப்பாக ஆடியும் தோல்வி அடைந்திருந்தோம். ஆனால் இந்த முறை நிறைய தவறுகளை செய்தும் ஜெயித்திருந்தோம். இதுதான் வேடிக்கையான விளையாட்டு. இதனால் தலையை குனிந்து விட்டு நாங்கள் வேலையை மட்டும் சிறப்பாக செய்ய நினைக்கிறோம்” என சஞ்சு சாம்சன் கூறினார்.

சற்று முன்